தேசிய கருத்தரங்கம்


தேசிய கருத்தரங்கம்
x

நாமக்கல் அறிஞர் அண்ணா அரசு கலைக்கல்லூரியில் தேசிய கருத்தரங்கம் நடைபெற்றது.

நாமக்கல்

மோகனூர்

நாமக்கல் அறிஞர் அண்ணா அரசு கலைக்கல்லூரி இயற்பியல் துறை சார்பில், தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மாநில மன்றம் மற்றும் தமிழ்நாடு மாநில உயர்கல்வி மன்றத்தின் நிதி பங்களிப்புடன் 2 நாட்கள், பொருள் அறிவியலின் சமீபத்திய போக்குகள்-2023 என்ற தலைப்பில் தேசிய கருத்தரங்கம் நடைபெற்றது. இயற்பியல் துறை தலைவர் சின்னுசாமி வரவேற்றார். கல்லூரி முதல்வர் எம்.குமரவேலு முன்னிலை வகித்து கருத்தரங்கை தொடங்கி வைத்தார். கருத்தரங்கிற்கு தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் எஸ்.ஆறுமுகம் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசினார். கருத்தரங்கிற்கு கேரளா மகாத்மா காந்தி பல்கலைக்கழகத்தின் மூத்த பேராசிரியர் முனைவர் நந்தகுமார் கலரிக்கல், கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் ஆர்.டி.ராஜேந்திரகுமார் மற்றும் தர்மபுரம் ஞாணாம்பிகை, அரசு கல்லூரியின் உதவி பேராசிரியர் சண்முகம் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டு பேசினர். இதில் தமிழகத்தின் பல்வேறு கல்லூரிகளில் இருந்து 193 மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். 41 ஆய்வுக் கட்டுரைகள் சமர்ப்பிக்கப்பட்டன. முதல் 3 இடங்களை பிடித்து வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசு, சான்றிதழ்கள் கல்லூரி முதல்வர் வழங்கினார். ஏற்பாடுகளை இயற்பியல் துறை தலைவர் சின்னுசாமி, நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்கள் முனைவர் வேலுச்சாமி, முனைவர் சசிகுமார், முனைவர் கோபி மற்றும் துறை பேராசிரியர்கள் ஆகியோர் செய்திருந்தனர்.


Next Story