அரசு விளையாட்டு அரங்கம் அமைப்பதற்கு இடம் தேர்வு


அரசு விளையாட்டு அரங்கம் அமைப்பதற்கு இடம் தேர்வு
x
தினத்தந்தி 17 April 2023 6:45 PM GMT (Updated: 17 April 2023 6:46 PM GMT)

விக்கிரவாண்டியில் அரசு விளையாட்டு அரங்கம் அமைப்பதற்கு இடம் தேர்வு அமைச்சர் பொன்முடி நேரில் ஆய்வு

விழுப்புரம்

விக்கிரவாண்டி

விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதியில் தமிழக அரசு அறிவித்த தொகுதிக்கு ஒரு விளையாட்டு அரங்கம் அமைப்பதற்கான இடத்தை தேர்வு செய்யும் பணி சுங்கச்சாவடி அருகில் உள்ள வி.சாத்தனூர் கிராம எல்லையில் நடைபெற்றது. இதை உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி நேரில் ஆய்வு செய்தார். அப்போது இடத்தின் பரப்பளவு மற்றும் தேவைப்படும் இடம், சுங்கச்சாவடி அருகிலேயே இடம் இருப்பதால் தமிழகத்தில் அனைத்து பகுதிகளிலும் இருந்து விளையாட்டு வீரர்கள், பொதுமக்கள் வந்து செல்லும் வசதி உள்ளிட்டவை குறித்து மாவட்ட கலெக்டர் பழனியிடம் ஆலோசனை நடத்தினார். இந்த ஆய்வின்போது எம்.எல்.ஏ.க்கள் புகழேந்தி, லட்சுமணன், மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் ஜெயச்சந்திரன், முன்னாள் எம்.எல்.ஏ. புஷ்பராஜ், கோட்டாட்சியர் ரவிச்சந்திரன், தாசில்தார் ஆதிசக்தி சிவக்குமரி மன்னன், பேரூராட்சி தலைவர் அப்துல்சலாம், தி.மு.க. ஒன்றிய செயலாளர்கள் வேம்பி ரவி, மும்மூர்த்தி, ரவிதுரை, ஜெயபால், நகர செயலாளர் நைனாமுகமது, மாவட்ட பிரதிநிதிகள் திலகர், வேணுகோபால், ஊராட்சி மன்ற தலைவர் விமலா தமிழரசன் உள்பட பலர் உடன் இருந்தனர்.


Next Story