வயல்களில் நடவு செய்ய விவசாயிகளுக்கு மரக்கன்றுகள்


வயல்களில் நடவு செய்ய விவசாயிகளுக்கு மரக்கன்றுகள்
x

வயல்களில் நடவு செய்ய விவசாயிகளுக்கு மரக்கன்றுகள் வழங்கப்பட்டன.

பெரம்பலூர்

வேப்பந்தட்டை:

வேப்பந்தட்டை வட்டாரத்தில் தமிழ்நாடு விவசாய நிலங்களில் நீடித்த பசுமை போர்வை இயக்கம் திட்டத்தின் மூலம் விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தவும், மண்வளம் மேம்படவும் இலவசமாக மரக்கன்றுகள் விவசாயிகளுக்கு வழங்கப்பட உள்ளது. தற்போது வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் விவசாயிகள் தங்களின் நிலங்களில் வரப்பு ஓரங்களில் மரக்கன்றுகள் நடவு செய்தால் உயிர் பிடித்து நன்கு வளரும். அதாவது வரப்பு மற்றும் வயல் ஓரங்களில் நடைவு செய்யும் விவசாயிகளும், அடர்வு நடவு முறையில் தனிப் பயிராக நிலத்தில் நடவு செய்ய உள்ள விவசாயிகளும் வேப்பந்தட்டை வேளாண்மை அலுவலகத்தை அணுகி ஆதார் அட்டை, சிட்டா, வங்கி பாஸ்பத்தகம், போட்டோ ஆகியவைகள் கொடுத்து பதிவு செய்தால் இலவசமாக விவசாயிகளுக்கு செம்மரம், ஈடடி, மகாகனி, பூவரசு, வேங்கை அகிய மரக்கன்றுகள் வழங்கப்பட உள்ளது. மேலும் நடவு செய்யும் விவசாயிகளுக்கு அடுத்த ஆண்டு முதல் மரக்கன்று பராமரிப்புக்கு உயிருடன் உள்ள மரக்கன்று ஒன்றுக்கு ரூ.7 வீதம் பராமரிப்பு மானியமும் வழங்கப்படும். எனவே இதனை விவசாயிகள் பயன்படுத்தி பயன்பெறலாம். இந்த தகவலை வேளாண்மை உதவி இயக்குனர் பச்சையம்மாள் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.


Next Story