ஆட்டோ டிரைவருக்கு கத்திக்குத்து


ஆட்டோ டிரைவருக்கு கத்திக்குத்து
x

வடமதுரை அருகே ஆட்டோ டிரைவரை கத்தியால் குத்திய உறவினர் கைது செய்யப்பட்டார்.

திண்டுக்கல்

வடமதுரை அருகே உள்ள தென்னம்பட்டியை சேர்ந்தவர் திருப்பதி (வயது 31), ஆட்டோ டிரைவர். இவரது உறவினர் கார்த்தீஸ்வரன் (31). இவர் தென்னம்பட்டியில் உள்ள ஒரு தனியார் எண்ணெய் ஆலையில் வேலை பார்த்து வருகிறார். இந்த நிலையில் திருப்பதி மற்றும் அவரது உறவினர்கள் தங்களுக்கு சொந்தமான இடத்தில் குலதெய்வ கோவில் கட்ட முடிவு செய்தனர். கடந்த 29-ந்தேதி அந்த இடத்தை திருப்பதியின் தாய் சுசீலா சுத்தம் செய்வதற்காக சென்றார். அப்போது கார்த்தீஸ்வரன் அவரை தடுத்து அந்த இடத்தில் கோவில் கட்டக்கூடாது என்று தகராறு செய்துள்ளார். இதையறிந்த திருப்பதி, கார்த்தீஸ்வரனின் வீட்டிற்கு சென்று இது குறித்து தட்டிக் கேட்டுள்ளார். அப்போது ஆத்திரம் அடைந்த கார்த்தீஸ்வரன் கத்தியால் திருப்பதியை குத்தியுள்ளார். இதில் காயமடைந்த திருப்பதி, திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். இந்த சம்பவம் குறித்து திருப்பதி கொடுத்த புகாரின் பேரில், வடமதுரை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பிரபாகரன் வழக்குப்பதிவு செய்து கார்த்தீஸ்வரனை கைது செய்தார்.


Next Story