சத்தியமங்கலம் மார்க்கெட்டில் ஜாதிமல்லி கிலோ ரூ.500-க்கு ஏலம்


சத்தியமங்கலம் மார்க்கெட்டில்   ஜாதிமல்லி கிலோ ரூ.500-க்கு ஏலம்
x

ஜாதிமல்லி கிலோ ரூ.500-க்கு ஏலம்

ஈரோடு

சத்தியமங்கலம் பூ மார்க்கெட்டில் நேற்று பூக்கள் ஏலம் நடந்தது. இந்த ஏலத்துக்கு சத்தியமங்கலம் மற்றும் சுற்றுவட்டார பகுதியில் உள்ள விவசாயிகள் 4 டன் பூக்களை கொண்டு வந்திருந்தார்கள்.

இதில் மல்லிகைப்பூ (கிலோ) ரூ.297-க்கும், முல்லைப்பூ ரூ.140-க்கும், காக்கடா ரூ.100-க்கும், செண்டுமல்லி ரூ.39-க்கும், பட்டுப்பூ ரூ.60-க்கும், ஜாதிமல்லி ரூ.500-க்கும், கனகாம்பரம் ரூ.400-க்கும், சம்பங்கி ரூ.45-க்கும், அரளி ரூ.100-க்கும், துளசி ரூ.30-க்கும், செவ்வந்தி ரூ.100-க்கு ஏலம் போனது.


Next Story