எந்தவித சோதனைகள் ஏற்பட்டாலும் அ.தி.மு.க.வை மீண்டும் வலிமைபடுத்துவேன்-சங்ககிரியில் சசிகலா பேச்சு


எந்தவித சோதனைகள் ஏற்பட்டாலும் அ.தி.மு.க.வை மீண்டும் வலிமைபடுத்துவேன்-சங்ககிரியில் சசிகலா பேச்சு
x

எந்தவித சோதனைகள் ஏற்பட்டாலும் அவற்றை எல்லாம் முறியடித்து அ.தி.மு.க.வை மீண்டும் வலிமைபடுத்துவேன் என்று சங்ககிரியில் சசிகலா பேசினார்.

சேலம்

சங்ககிரி:

சசிகலா பேச்சு

சேலத்தில் இருந்து ஈரோடுக்கு சசிகலா பிரசார வாகனத்தில் சென்றார். வழியில் சங்ககிரி பழைய பஸ் நிலையம் அருகே அ.தி.மு.க. முன்னாள் நகர செயலாளர் வேட்ராயன் தலைமையில் அவருக்கு பட்டாசு வெடித்தும், மேளதாளங்கள் முழங்கவும் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அப்போது கூடியிருந்த ஆதரவாளர்கள் மத்தியில் சசிகலா பேசியதாவது:-

அ.தி.மு.க. கடைகோடி தொண்டர்களின் நம்பிக்கையை பெற்று, ஏழை, எளிய மக்களின் வாழ்வுக்காக போராடிய இயக்கமாகும். இந்த இயக்கத்திற்காக பாடுபட்ட அனைவரையும் ஒருங்கிணைத்து, வலிமையான ஒரு இயக்கமாக மீண்டும் கொண்டு வருவது தான் எனது குறிக்கோள். எந்தவித சோதனைகள் நம் இயக்கத்திற்கு ஏற்பட்டாலும் அவற்றையெல்லாம் முறியடித்து, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா Sasikala's speech in Sangakiriஆகியோர் எண்ணத்தை ஈடேற்றும் வகையில், அ.தி.மு.க.வை மீண்டும் வலிமைபடுத்துவேன்.

மின் கட்டண உயர்வு

நானும், ஜெயலலிதாவும் ஒரு தாய் வயிற்றில் பிறக்காமல் இருந்திருக்கலாம். ஆனால் நாங்கள் என்றைக்கும் நல்ல சகோதரிகளாக, நட்பிற்கு இலக்கணமாக வாழ்ந்ததை, இறைவன் எனக்கு அளித்த வரமாக எண்ணுகிறேன்.

தமிழகத்தில் தி.மு.க. தலைமையிலான அரசு பொறுப்பேற்று 15 மாதங்கள் முடிவடைந்துள்ளது. மக்களுக்கு பயனளிக்கும் வகையில் எந்த திட்டமும் நிறைவேற்றப்படவில்லை. தமிழக மக்கள் ஏற்கனவே கொரோனாவால் ஏற்பட்ட இழப்புகளில் இருந்து மீள முடியாமல் போராடிவரும் நிலையில், மின் கட்டண உயர்வு கண்டிக்கத்தக்கது. முதியோர் உதவித் தொகையை எந்த தடையும் இல்லாமல் வழங்க வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார். இதையடுத்து அவர் ஈரோடுக்கு புறப்பட்டு சென்றார்.


Next Story