அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழகத்தில் மரக்கன்று நடும் விழா
கொடைக்கானல் அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழகத்தில் மரக்கன்று நடும் விழா நடைபெற்றது.
திண்டுக்கல்
கொடைக்கானல் அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழகத்தில் உலக தண்ணீர் தினம் மற்றும் உலக வனநாள் விழா கொண்டாடப்பட்டது. இந்த விழாவுக்கு பல்கலைக்கழக துணை வேந்தர் கலா தலைமை தாங்கி, பல்கலைக்கழக வளாகத்தில் மரக்கன்றுகளை நட்டு வைத்து விழாவை தொடங்கி வைத்தார். பின்னர் பல்கலைக்கழக பேராசிரியர்கள், மாணவிகளுடன் இணைந்து வனத்துறையினர் கல்லூரி வளாகத்தில் மரக்கன்றுகளை நட்டனர்.
இந்த விழாவையொட்டி கடந்த ஆண்டு நவம்பர் மாதம் முதல் பல்கலைக்கழக வளாகத்தில் மரக்கன்றுகள் நடவு செய்யும் பணி நடந்து வருகிறது. அந்த வகையில் நேற்று வரை சுமார் 15 ஆயிரம் மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த விழாவில் வனச்சரகர் சிவக்குமார், வனவர்கள் அழகுராஜா, கார்த்தி, பல்கலைக்கழக தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் கிளாரா தேன்மொழி, பேராசிரியை ஜோஸ் கவிதா உள்பட பலர் கலந்துகொண்டனர்.
Related Tags :
Next Story