கோர்ட்டில் ஆஜராகாத தூய்மை பணியாளர் கைது
கோர்ட்டில் ஆஜராகாத தூய்மை பணியாளர் கைது செய்யப்பட்டார்.
திருநெல்வேலி
அம்பை:
விக்கிரமசிங்கபுரம் நாராயண கோவில் தெருவைச் சேர்ந்தவர் சுப்பையா மனைவி கோமதி. இவரிடம், அருள்ராஜ் மனைவி பகவதி வங்கி காசோலை கொடுத்து ரூ.1 லட்சம் கடன் பெற்றார். இந்த நிலையில் பகவதியின் வங்கி கணக்கில் போதிய பணம் இல்லாததால் காசோலை திரும்பியது.
இதுகுறித்து கோமதி, அம்பை கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் நீண்ட காலமாக ஆஜராகாத பகவதிக்கு கோர்ட்டு பிடிவாரண்டு பிறப்பித்தது. இதையடுத்து பகவதியை விக்கிரமசிங்கபுரம் போலீசார் கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். பகவதி, விக்கிரமசிங்கபுரம் நகராட்சியில் தூய்மை பணியாளராக உள்ளார்.
Related Tags :
Next Story