ஆழியூர் தர்காவில் சந்தனம் பூசும் நிகழ்ச்சி


ஆழியூர் தர்காவில் சந்தனம் பூசும் நிகழ்ச்சி
x

ஆழியூர் தர்காவில் சந்தனம் பூசும் நிகழ்ச்சி

நாகப்பட்டினம்

சிக்கல்:

கீழ்வேளூர் அருகே ஆழியூர் மெயின் ரோட்டில் உள்ள செய்யது இனாயத்துல்லா வலியுல்லாஹ் தர்காவில் கந்தூரி விழா கடந்த 4-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவையொட்டி சிக்கல் பள்ளிவாசலில் இருந்து சந்தனம் குடம் எடுத்து வரப்பட்டது. பின்னர் ‌‌அலங்கரிக்கப்பட்ட சந்தனக்கூடு முக்கிய தெருக்கள் வழியாக தர்காவை வந்தடைந்தது. நேற்று அதிகாலை தர்காவில் சந்தனம் பூசும் நிகழ்ச்சி நடந்தது. வருகிற 17-ந்தேதி இரவு கொடி இறக்கும் நிகழ்ச்சி நடக்கிறது. நிகழ்ச்சியில் ஆழியூர் பள்ளிவாசல் நிர்வாகிகள், ஜமாத்தார்கள் மற்றும் திரளான இஸ்லாமியர்கள் கலந்து கொண்டனர்.


Next Story