ஓசூர், கிருஷ்ணகிரியில் வரலட்சுமி பண்டிகையையொட்டி பூஜை பொருட்கள் விற்பனை ஜோர்


ஓசூர், கிருஷ்ணகிரியில் வரலட்சுமி பண்டிகையையொட்டி பூஜை பொருட்கள் விற்பனை ஜோர்
x

ஓசூர், கிருஷ்ணகிரியில் வரலட்சுமி பண்டிகையையொட்டி பூஜை பொருட்கள் விற்பனை ஜோராக நடந்தது.

கிருஷ்ணகிரி

ஓசூர்:

சுமங்கலிப்பெண்கள் சிறப்பாக கொண்டாடும் வரலட்சுமி நோன்பு இன்று(வெள்ளிக்கிழமை) கடைபிடிக்கப்படுகிறது. வரலட்சுமி பண்டிகையை, கர்நாடகம் மற்றும் ஆந்திர மாநிலத்தில் பெண்கள் விமரிசையாக கொண்டாடுவது வழக்கம். கிருஷ்ணகிரி மாவட்டம், இந்த மாநிலங்களின் எல்லையருகே இருப்பதால், இங்கும் வரலட்சுமி நோன்பு சிறப்பாககொண்டாடப்படுகிறது.

இந்த பண்டிகையையொட்டி, ஓசூர் எம்.ஜி.ரோடு, கடைவீதி, பாகலூர் ரோடு சர்க்கிள், தாலுகா அலுவலக சாலை ஆகிய இடங்களில் உள்ள கடைகளில் பூஜை பொருட்கள், பழங்கள், தேங்காய், வாழைக்கன்று, மாவிலை ஆகியவற்றின் விற்பனை மும்முரமாக நடைபெற்றது. காலை முதலே இந்த பகுதிகளில் உள்ள கடைகளில் ஆண்களும், பெண்களும் குவிந்து பண்டிகைக்கு தேவையான பொருட்களை வாங்கி சென்றனர். இதனால், நகரின் முக்கிய பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதேேபால், ஓசூர் பஸ் நிலையம் எதிரே உள்ள பூ மார்க்கெட்டுகளிலும் சாமந்தி, ரோஜா உள்ளிட்ட பூ வகைகளை பொதுமக்கள் அதிகளவில் வாங்கி சென்றனர். இதேபோல் கிருஷ்ணகிரியிலும் பூஜை பொருட்கள் விற்பனை மும்முரமாக நடைபெற்றது.


Next Story