ரூ.27 லட்சத்துக்கு பருத்தி விற்பனை


ரூ.27 லட்சத்துக்கு பருத்தி விற்பனை
x
தினத்தந்தி 8 Feb 2023 6:45 PM GMT (Updated: 8 Feb 2023 6:45 PM GMT)

கள்ளக்குறிச்சி வார சந்தையில் ரூ.27 லட்சத்துக்கு பருத்தி விற்பனை

கள்ளக்குறிச்சி

கள்ளக்குறிச்சி

கள்ளக்குறிச்சியில் உள்ள வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் நேற்று நடைபெற்ற பருத்தி சந்தையில் கள்ளக்குறிச்சி, சங்கராபுரம், கல்வராயன்மலை, திருக்கோவிலூர், உளுந்தூர்பேட்டை, தியாகதுருகம் மற்றும் விழுப்புரம், பெரம்பலூர், கடலூர் மாவட்டங்களை சேர்ந்த 187 விவசாயிகள் 920 பருத்தி மூட்டைகளை விற்பனைக்கு கொண்டு வந்தனர். தொடர்ந்து நடைபெற்ற ஏலத்தில் எல்.ஆர்.ஏ.ரக பருத்தி ஒரு குவிண்டால் அதிகபட்சம் ரூ.8,542-க்கும், குறைந்த பட்சம் ரூ.7,559-க்கும், கொட்டு ரக பருத்தி ஒரு குவிண்டால் அதிகபட்சம் ரூ.6,558-க்கும், குறைந்தபட்சம் ரூ.4,309-க்கும் ஏலம் போனது. நேற்று நடைபெற்ற சந்தையில் மொத்தம் ரூ.27 லட்சத்துக்கு பருத்தி விற்பனையானது. திருப்பூர், விழுப்புரம், பண்ருட்டி கும்பகோணம், சங்ககிரி, ஆத்தூர், கொங்கணாபுரம், புஞ்சைபுளியம்பட்டி, ஆகிய ஊர்களை சேர்ந்த வியாபாரிகள் பருத்தியை வாங்கி சென்றனர். மேற்கண்ட தகவலை கள்ளக்குறிச்சி வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்க மேலாண்மை இயக்குனர் நிர்மல் தெரிவித்தாா்.


Next Story