ரூ.52¼ லட்சத்துக்கு வேளாண் பொருட்கள் விற்பனை


ரூ.52¼ லட்சத்துக்கு வேளாண் பொருட்கள் விற்பனை
x

சாலைப்புதூர் ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் ரூ.52¼ லட்சத்துக்கு வேளாண் பொருட்கள் விற்பனை செய்யப்பட்டன.

கரூர்

ஒழுங்கு முறை விற்பனை கூடம்

கரூர் மாவட்டம், சாலைப்புதூரில் வேளாண் ஒழுங்கு முறை விற்பனை கூடம் செயல்பட்டு வருகிறது. இங்கு வாரந்தோறும் தேங்காய், தேங்காய் பருப்பு ஆகியவற்றுக்கான ஏலம் நடைபெறுகிறது. இதில் அருகே உள்ள கரூர், க.பரமத்தி ஒன்றிய பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் தாங்கள் விளைவித்த வேளாண் பொருட்களை விற்பனைக்கு கொண்டு செல்கின்றனர். இங்கு நடைபெறும் ஏலத்தில் தமிழகம் மற்றும் வெளி மாநிலங்களை சேர்ந்த வியாபாரிகள் மற்றும் எண்ணெய் நிறுவன முகவர்கள் கலந்து கொண்டு பொருட்களை வாங்கி செல்கின்றனர். அதன்படி இந்த வாரம் நடந்த ஏலத்தில் 16.6½ குவிண்டால் எடை கொண்ட 4,310 தேங்காய் விற்பனைக்கு வந்தது. இதில் கிலோ ஒன்றுக்கு அதிகபட்ச விலையாக ரூ.26.15-க்கும், குறைந்தபட்ச விலையாக ரூ.18.09-க்கும், சராசரி விலையாக ரூ.25.45-க்கும் என மொத்தம் ரூ.35 ஆயிரத்து 791-க்கு விற்பனையானது.

ரூ.52¼ லட்சத்துக்கு விற்பனை

அதேபோல் 115.2½ குவிண்டால் எடை கொண்ட 238 மூட்டை தேங்காய் பருப்பு விற்பனைக்கு வந்தது. இதில் முதல் தரம் தேங்காய் பருப்பு கிலோ ஒன்றுக்கு அதிகபட்ச விலையாக ரூ.82.90-க்கும், குறைந்தபட்ச விலையாக ரூ.81.99-க்கும், சராசரி விலையாக ரூ.82.50-க்கும் விற்பனையானது. 2-ம் தரம் தேங்காய் பருப்பு கிலோ ஒன்றுக்கு அதிகபட்ச விலையாக ரூ.79.99-க்கும், குறைந்தபட்ச விலையாக ரூ.62.46-க்கும், சராசரி விலையாக ரூ.75.79-க்கும் என மொத்தம் ரூ.8 லட்சத்து 57 ஆயிரத்து 764-க்கு விற்பனையானது.

அதேபோல் 184.91 குவிண்டால் எடை கொண்ட 247 மூட்டை எள் விற்பனைக்கு வந்தது. இதில் கருப்பு எள் கிலோ ஒன்றுக்கு அதிகபட்ச விலையாக ரூ.167.99-க்கும், குறைந்தபட்ச விலையாக ரூ.148.99-க்கும், சராசரி விலையாக ரூ.162.99-க்கும், சிவப்பு எள் கிலோ ஒன்றுக்கு அதிகபட்ச விலையாக ரூ.166.99-க்கும், குறைந்தபட்ச விலையாக ரூ.148.99-க்கும், சராசரி விலையாக ரூ.157.69-க்கும் என மொத்தம் ரூ.28 லட்சத்து 80 ஆயிரத்து 116-க்கு விற்பனையானது.

195.81½ குவிண்டால் எடை கொண்ட 637 மூட்டை நிலக்கடலைக்காய் விற்பனைக்கு வந்தது. இதில் கிலோ ஒன்றுக்கு அதிகபட்ச விலையாக ரூ.81.30-க்கும், குறைந்தபட்ச விலையாக ரூ.66.75-க்கும், சராசரி விலையாக ரூ.78.50-க்கும் என மொத்தம் ரூ.14 லட்சத்து 65 ஆயிரத்து 739-க்கு விற்பனையானது. அதன்படி சாலைப்புதூர் அரசு வேளாண் ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் வேளாண் பொருட்கள் மொத்தம் ரூ.52 லட்சத்து 39 ஆயிரத்து 410-க்கு விற்பனையானது.


Next Story