புனித சுவக்கீன் அன்னாள் ஆலய சப்பரபவனி


புனித சுவக்கீன் அன்னாள் ஆலய சப்பரபவனி
x

குருமிலாங்குடியில் உள்ள புனித சுவக்கீன் அன்னாள் ஆலய சப்பரபவனி நடந்தது.

ராமநாதபுரம்

தொண்டி,

திருவாடானை தாலுகா குருமிலாங்குடி புனித சுவக்கீன் அன்னாள் ஆலய நூற்றாண்டு விழா கடந்த 12-ந் தேதி பங்குத்தந்தை மரிய அந்தோணி முன்னிலையில் கொடியேற்றத்துடன் தொடங்கியது.

திருவிழாவில் தினமும் மாலையில் நவநாள் திருப்பலியும் சிறப்பு மறையுரையும் 14-ந்தேதி அருட்தந்தை மரியலூயிஸ் தலைமையில் சிறப்பு தியானமும் நடைபெற்றது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக தூத்துக்குடி மறை மாவட்ட முன்னாள் ஆயர் யுவான் அம்புரோஸ் தலைமையில் திருவிழா ஆடம்பர கூட்டு திருப்பலியும், புதுப்பிக்கப்பட்ட ஆலயம் மற்றும் பாத்திமா மாதா கெபி ஆர்ச்சிப்பு நிகழ்ச்சியும் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட சப்பரங்களில் தூய மிக்கில் அதிதூதர், தூய பாத்திமா மாதா, புனித சுவக்கீன் அன்னாள் ஆகியோர் முக்கிய வீதிகள் வழியாக பவனி வந்தனர். இதில் குருமிலாங்குடி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஆயிரக்கணக்கான இறை மக்கள் கலந்து கொண்டனர். நேற்று மாலை நடைபெற்ற திருவிழா நிறைவு திருப்பலியை அருட்தந்தை ஆரோக்கியசாமி தலைமையில் அருட் தந்தையர்கள் நிறைவேற்றினர். விழா ஏற்பாடுகளை பங்குத்தந்தை மரிய அந்தோணி தலைமையில் அருட் சகோதரிகள் பங்கு பேரவை மற்றும் பங்கு இளைஞர் பேரவையினர், இறைமக்கள் செய்திருந்தனர்.


Related Tags :
Next Story