தீவிரவாதிகள் ஊடுருவலை தடுக்க கன்னியாகுமரி கடலில் பாதுகாப்பு ஒத்திகை


தீவிரவாதிகள் ஊடுருவலை தடுக்க கன்னியாகுமரி கடலில் பாதுகாப்பு ஒத்திகை
x
தினத்தந்தி 20 Jan 2023 6:45 PM GMT (Updated: 20 Jan 2023 6:46 PM GMT)

கன்னியாகுமரி கடலில் தீவிரவாதிகள் ஊடுருவலை தடுக்க பாதுகாப்பு ஒத்திகை நடந்தது. அப்போது போலீசார் அதிநவீன படகில் ரோந்து சென்றனர்.

கன்னியாகுமரி

கன்னியாகுமரி:

கன்னியாகுமரி கடலில் தீவிரவாதிகள் ஊடுருவலை தடுக்க பாதுகாப்பு ஒத்திகை நடந்தது. அப்போது போலீசார் அதிநவீன படகில் ரோந்து சென்றனர்.

பாதுகாப்பு ஒத்திகை

கடல் வழியாக தீவிரவாதிகள் ஊடுருவலை தடுக்க படகு மூலம் போலீசார் பாதுகாப்பு ஒத்திகை நடத்துவது வழக்கம். அதன்படி தமிழ்நாடு கடலோர பாதுகாப்பு குழும போலீசார், இந்திய கடலோர காவல் படை, இந்திய கடற்படை, மீன்வளத்துறை மற்றும் உள்ளூர் போலீசார் சார்பில் தமிழகத்தின் கடலோரப் பகுதியில் 'சஜாக்' என்ற பாதுகாப்பு ஒத்திகை நேற்று நடந்தது.

கன்னியாகுமரி கடல் பகுதியில் கடலோர பாதுகாப்பு குழும போலீசார் அதிநவீன ரோந்து படகு மூலம் நேற்று காலை 8 மணி முதல் பாதுகாப்பு ஒத்திகையில் ஈடுபட்டனர்.

கூடங்குளம் வரை

கடலோர பாதுகாப்பு குழும போலீஸ் இன்ஸ்பெக்டர் நவீன் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் சிதம்பரம், நுண்ணறிவு பிரிவு ஏட்டு துரைசிங் ஆகியோர் ஒத்திகையில் ஈடுபட்டனர். இவர்கள் அதிநவீன ரோந்து படகில் சின்னமுட்டம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து கூடங்குளம் கடல் பகுதி வரை சென்று கண்காணித்தனர். இந்த பாதுகாப்பு ஒத்திகை நேற்று மாலை 6 மணி வரை நடைபெற்றது.


Next Story