வடகிழக்கு பருவமழை குறித்த பாதுகாப்பு ஒத்திகை நிகழ்ச்சி


வடகிழக்கு பருவமழை குறித்த பாதுகாப்பு ஒத்திகை நிகழ்ச்சி
x

வன்னிவேடுமோட்டூர் பள்ளியில் வடகிழக்கு பருவமழை குறித்த பாதுகாப்பு ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது.

ராணிப்பேட்டை

வாலாஜாவை அடுத்த வன்னிவேடு மோட்டூர் பகுதியில் உள்ள அரசினர் உயர்நிலைப்பள்ளி வளாகத்தில் வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பள்ளி மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு வெள்ள பாதிப்புகள், பேரிடர் காலங்களில் தற்காத்துக் கொள்ளும் வழிமுறைகள் குறித்த விழிப்புணர்வு ஒத்திகை நிகழ்ச்சி நேற்று ராணிப்பேட்டை தீயணைப்பு மற்றும் மீட்பு பணி குழு சார்பில் நடந்தது.ஒத்திகை நிகழ்ச்சியில் பள்ளி மாணவர்கள், ஆசிரியர்களுக்கு வடகிழக்கு பருவமழை காலங்களில் வெள்ள பாதிப்பு ஏற்பட்டால் அதில் இருந்து எவ்வாறு தங்களை பாதுகாத்துக் கொள்வது, தற்காப்பு சாதனங்களை எவ்வாறு கையாள்வது? என்பது உள்பட பல்வேறு வழிமுறைகளை செய்து காட்டினர்.

தீ விபத்து ஏற்பட்டால் உடனடியாக பள்ளி வளாகத்தில் வைக்கப்பட்டுள்ள தீயணைப்பான்களை பயன்படுத்தி எவ்வாறு தீயை அணைப்பது, தீ மற்றும் வெள்ள விபத்துகளில் சிக்கியவர்களை எவ்வாறு பாதுகாப்பாக மீட்டு முதலுதவி அளிப்பது என்பன போன்ற ஒத்திகையை தீயணைப்பு வீரர்கள் செய்து காட்டினர்.நிகழ்ச்சியில் பள்ளி தலைமையாசிரியர் (பொறுப்பு) சிவானந்தம், ராணிப்பேட்டை மாவட்ட தீயணைப்பு அலுவலர் லஷ்மணநாராயணன், உதவி மாவட்ட தீயணைப்பு அலுவலர் திருமுருகன் மற்றும் தீயணைப்பு வீரர்கள் பலர் கலந்து கொண்டனர்.


Next Story