சடையம்பாளையம் மதுரை வீரன் கோவில் திருவிழா


சடையம்பாளையம் மதுரை வீரன் கோவில் திருவிழா
x

சடையம்பாளையம் மதுரை வீரன் கோவில் திருவிழா நடைபெற்றது.

கரூர்

கரூர் மாவட்டம் புன்னம் சத்திரம் அருகே சடையம்பாளையம் காலனியில் உள்ள மதுரைவீரன், பொம்மியம்மாள், வெள்ளையம்மாள், கருப்பண்ணசாமி ஆகிய தெய்வங்களுக்கு முக்கிய விரத நாட்களில் சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜைகள் செய்யப்பட்டு பக்தர்கள் வழிபாடு நடைபெற்று வருகிறது. இங்கு 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை திருவிழா நடைபெறுவது வழக்கமாகும். அதன்படி தற்போது நடைபெறும் திருவிழாவையொட்டி மதுரைவீரன், கன்னிமார் தெய்வங்களுக்கு காப்புகட்டுதல் நிகழ்ச்சி கடந்த 14-ந் தேதி தொடங்கியது. அதனைத்தொடர்ந்து தினசரி அபிஷேக ஆராதனைகள் நடைபெற்று வந்தன. இந்நிலையில் திருவிழாவை முன்னிட்டு நேற்று சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் காவிரி ஆற்றுக்கு சென்று புனித நீராடி தீர்த்த குடங்களுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு மேளதாளங்கள் முழங்க பக்தர்கள் ஊர்வலமாக தீர்த்தம் எடுத்துக்கொண்டு கோவிலை வந்தடைந்தனர்.

தொடர்ந்து இன்று (வெள்ளிக்கிழமை) காலை சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த பெண்கள் கோவில் வளாகத்தில் பொங்கல் வைத்து படையலிட்டு வழிபாடு செய்கின்றனர். அதன்பிறகு கிடாவெட்டும் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது. தொடர்ந்து மதுரைவீரனுக்கு அசைவ படையல் போட்டு சிறப்புபூஜை, ஆராதனைகள் செய்யப்பட்டு சுவாமி தரிசனம் செய்யப்பட உள்ளது. விழாவில் கலந்து கொண்ட பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் செய்திருந்தனர்.


Next Story