தியாகதுருகம் ஒன்றியக்குழு கூட்டம்


தியாகதுருகம் ஒன்றியக்குழு கூட்டம்
x

தியாகதுருகம் ஊராட்சி ஒன்றியக்குழு கூட்டம் நடந்தது.

கள்ளக்குறிச்சி

தியாகதுருகம்,

தியாகதுருகம் ஊராட்சி ஒன்றியக்குழு சாதாரண கூட்டம் நடந்தது. இதற்கு ஒன்றியக்குழு தலைவர் தாமோதரன் தலைமை தாங்கினார். வட்டார வளர்ச்சி அலுவலர்கள் இந்திராணி, பன்னீர்செல்வம், துணைத் தலைவர் நெடுஞ்செழியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். துணை வட்டார வளர்ச்சி அலுவலர் கொளஞ்சிவேலு வரவேற்றார். முன்னதாக ஒன்றிய அலுவலக வரவு- செலவு கணக்கு வாசிக்கப்பட்டது. கூட்டத்தில் தியாகதுருகம் ஊராட்சி ஒன்றியங்களுக்குட்பட்ட அனைத்து கிராமங்களிலும் குடிசைகள் இல்லாத நிலையை உருவாக்கிட முழுவீச்சில் நடவடிக்கை எடுக்கப்படும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. இதில் துணை வட்டார வளர்ச்சி அதிகாரிகள் சந்திரசேகரன், பூமா, செல்வராஜ், லோகேஸ்வரி, சுதாகர், சங்கர் மற்றும் அனைத்து ஒன்றியக்குழு உறுப்பினர்கள், ஒன்றிய பொறியாளர்கள், ஒன்றிய மேற்பார்வையாளர்கள், அலுவலர்கள் கலந்து கொண்டனர்.


Next Story