ரூ.33 லட்சம் கோவில் நிலங்கள் மீட்பு


ரூ.33 லட்சம் கோவில் நிலங்கள் மீட்பு
x
தினத்தந்தி 14 July 2022 11:29 PM IST (Updated: 14 July 2022 11:31 PM IST)
t-max-icont-min-icon

பழனி அருகே ரூ.33 லட்சம் மதிப்பிலான கோவில் நிலங்கள் மீட்கப்பட்டுள்ளது

திண்டுக்கல்

பழனி அருகே தாளையூத்து கிராமத்தில் இந்து சமய அறநிலையத்துக்கு சொந்தமான அங்காளம்மன், மாரியம்மன், வேலுசமுத்திரம் செங்கழுநீரம்மன் ஆகிய கோவில்கள் உள்ளன. இந்த கோவில்களுக்கு சொந்தமான ரூ.33 லட்சம் மதிப்பிலான 25.95 ஏக்கர் நிலத்தை தனியார் சிலர் ஆக்கிரமித்து இருந்தனர். இதுகுறித்து அறிந்த அறநிலையத்துறையினர் கோவில் நிலங்களை மீட்க முடிவு செய்தனர்.

அதன்படி அறநிலையத்துறை திண்டுக்கல் உதவி ஆணையர் சுரேஷ் தலைமையில் கோவில் அதிகாரி ராமநாதன், தாசில்தார் விஜயலட்சுமி, ஆய்வாளர்கள் கண்ணன், ரஞ்சனி உள்ளிட்ட அதிகாரிகள் சம்பந்தப்பட்ட கோவில்களுக்கு சென்று நிலங்களில் இருந்த ஆக்கிரமிப்புகளை அகற்றினர். இதைத்தொடர்ந்து இந்த இடம் கோவிலுக்கு சொந்தமானது, தனியார் ஆக்கிரமிப்பு செய்யக்கூடாது என்ற தகவல் பலகையை அங்கு வைத்தனர்.


Next Story