சாதிச்சான்றிதழுக்கு ரூ.3 ஆயிரம் லஞ்சம்: வருவாய் ஆய்வாளருக்கு 3 ஆண்டு சிறை-சிவகங்கை கோர்ட்டு தீர்ப்பு

சாதிச்சான்றிதழுக்கு ரூ.3 ஆயிரம் லஞ்சம்: வருவாய் ஆய்வாளருக்கு 3 ஆண்டு சிறை-சிவகங்கை கோர்ட்டு தீர்ப்பு
x

சாதிச்சான்றிதழ் வழங்க ரூ.3 ஆயிரம் லஞ்சம் வாங்கிய வருவாய் ஆய்வாளருக்கு 3 ஆண்டு சிறை தண்டனை விதித்து சிவகங்கை லஞ்ச ஒழிப்பு கோர்ட்டு தீ்ர்ப்பளித்தது.

சிவகங்கை

சாதிச்சான்றிதழ் வழங்க ரூ.3 ஆயிரம் லஞ்சம் வாங்கிய வருவாய் ஆய்வாளருக்கு 3 ஆண்டு சிறை தண்டனை விதித்து சிவகங்கை லஞ்ச ஒழிப்பு கோர்ட்டு தீ்ர்ப்பளித்தது.

லஞ்சம்

சிவகங்கையை அடுத்த நாட்டரசன் கோட்டையை சேர்ந்தவர் மீனாட்சி ஆச்சி. இவர் கடந்த 2011-ம் ஆண்டு தன் மகளுக்கு சாதிச்சான்றிதழ் பெற நாட்டரசன் கோட்டை வருவாய் ஆய்வாளரிடம் விண்ணப்பித்தார். அப்போது, பணியில் இருந்த வருவாய் ஆய்வாளர் செந்தில்குமார், சாதிச்சான்றிதழுக்கு கையொப்பமிட ரூ.3 ஆயிரம் லஞ்சமாக கேட்டுள்ளார்.

இது குறித்து மீனாட்சி ஆச்சி சிவகங்கையில் உள்ள லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் செய்தார். பின்னர் ரூ.3 ஆயிரத்தை வருவாய் ஆய்வாளர் செந்தில்குமாரிடம் அவரது அலுவலகத்தில் கொண்டு கொடுத்தார். அப்போது மறைந்து நின்றிருந்த சிவகங்கை லஞ்ச ஒழிப்பு போலீசார், செந்தில்குமாரை கையும், களவுமாக கைது செய்தனர். அவர் மீது சிவகங்கையில் உள்ள லஞ்ச ஒழிப்பு சிறப்பு கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர்.

3 ஆண்டு சிறை

இந்த வழக்கை விசாரணை செய்த நீதிபதி செந்தில் முரளி, குற்றம் சாட்டப்பட்ட வருவாய் ஆய்வாளர் செந்தில்குமாருக்கு 3 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பு கூறினார்.

Related Tags :
Next Story