தலைமை ஆசிரியரின் வீட்டில் 30 பவுன் நகை, ரூ.2 லட்சம் கொள்ளை


தலைமை ஆசிரியரின் வீட்டில்   30 பவுன் நகை, ரூ.2 லட்சம் கொள்ளை
x
தினத்தந்தி 13 Oct 2022 6:45 PM GMT (Updated: 13 Oct 2022 6:45 PM GMT)

தலைமை ஆசிரியரின் வீட்டில் 30 பவுன் நகை, ரூ.2 லட்சம் கொள்ளையடிக்கப்பட்டது.

சிவகங்கை

சிங்கம்புணரி,

சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரியில் காசியா பிள்ளைநகர் 3-வது மெயின் ரோடு அரணத்தங்குண்டு சாலை சந்திப்பு அருகில் வசித்து வருபவர் ராஜசேகர் (வயது 57). இவருடைய மனைவி தனலட்சுமி. ராஜசேகர் திருவாலத்தூர் கிராமத்தில் உள்ள தொடக்கப்பள்ளியில் தலைமை ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். அவரது மனைவி நாகமங்கலம் கிராமத்தில் நடுநிலைப்பள்ளியில் தலைமை ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். இவர்களுக்கு 2 மகள்களும், ஒரு மகனும் உள்ளனர். மகள்களுக்கு திருமணம் ஆகிவிட்டது. மகன் மதுரையில் உள்ள ஒரு கல்லூரியில் தங்கி படித்து வருகிறார்.

நேற்று முன்தினம் ராஜசேகர், தனலட்சுமி ஆகியோர் தங்கள் மகளின் பிரசவத்திற்காக வீட்டை பூட்டிவிட்டு காரில் புறப்பட்டு சென்றனர். இதற்கிடையே வீட்டில் யாரும் இல்லாததை அறிந்த மர்ம நபர்கள் வீட்டு கதவின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்து பீரோவில் இருந்த 30 பவுன் நகை மற்றும் ரூ.2 லட்சம் ஆகியவற்றை கொள்ளையடித்து தப்பி சென்றனர்.

நேற்று அதிகாலையில் வீட்டுக்கு வந்த ராஜசேகரன், தனலட்சுமி ஆகியோர் நகை, பணம் கொள்ளையடிக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்த புகாரின்பேரில் சிங்கம்புணரி போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர். சிங்கம்புணரியில் சமீப காலங்களாக தொடர் கொள்ளை நடைபெற்று வருகிறது. இதை தடுக்க இரவு நேரங்களில் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.


Related Tags :
Next Story