பெண்கள் காலிக்குடங்களுடன் சாலைமறியல்


பெண்கள் காலிக்குடங்களுடன் சாலைமறியல்
x

குடிநீர் கேட்டு பெண்கள் காலிக்குடங்களுடன் சாலைமறியலில் ஈடுபட்டனர்.

சேலம்

ஓமலூர்:-

ஓமலூர் அடுத்த பொட்டியபுரம் ஊராட்சியில் ஊராட்சி மன்ற அலுவலகம் எதிரே சுமார் 50-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த பகுதியில், தெருவிளக்கு, குடிநீர் வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லை என்றும், அவற்றை செய்து கொடுக்க கோரி அந்த பகுதி பொதுமக்கள் நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்தும் வந்தனர். மேலும் இது குறித்து ஊராட்சி மன்ற தலைவர் ஜெயமணியிடம் பலமுறை கோரிக்கை மனு கொடுத்தும் அடிப்படை வசதி செய்து கொடுக்கவில்லை என கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் சுமார் 30-க்கும் மேற்பட்டோர் நேற்று காலை காலிக்குடங்களுடன் ஓமலூர்-தின்னப்பட்டி ரோட்டில் பொட்டியபுரம் ஊராட்சி மன்ற அலுவலகம் முன்பு சாலைமறியலில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தொடர்ந்து அங்கு வந்த ஊராட்சி செயலர் தன்ராஜ், பொதுமக்களிடம் இந்த பகுதிக்கு ரூ.10 லட்சம் மதிப்பில் வளர்ச்சி திட்டங்களுக்காக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இனி குடிநீர் மற்றும் அனைத்து அடிப்படை வசதிகளும் செய்து கொடுக்கப்படும் என உறுதி அளித்தார். இதையடுத்து பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.


Next Story