குளியல் தொட்டிைய கட்டக்கோரி சாலை மறியல்


குளியல் தொட்டிைய கட்டக்கோரி சாலை மறியல்
x
தினத்தந்தி 28 Dec 2022 6:45 PM GMT (Updated: 28 Dec 2022 6:45 PM GMT)

குளியல் தொட்டிைய கட்டக்கோரி சாலை மறியல்

சிவகங்கை

சிங்கம்புணரி

சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி செட்டி ஊருணியை சுற்றிலும் நடை பாதைகள் மற்றும் கான்கிரீட் சுவர்கள் கட்டும் பணி விரைவாக நடைபெற்று 90 சதவீதத்திற்கு மேற்பட்ட பணிகள் முடிவுற்றன. சுமார் ஒரு கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டு இந்த பணி நடைபெற்று வருகிறது. தேர்வு நிலை பேரூராட்சி சார்பாக நடைபெற்று வரும் நடைபாதை அமைக்கும் பணியில் ஊருணியின் மேற்கு புறத்தில் உள்ள குளியல் தொட்டி உள்பட நான்கு பகுதியிலும் உள்ள குளியல் தொட்டிகள் அகற்றப்பட்டது. இந்நிலையில் 3 பகுதியில் உள்ள குளியல் தொட்டிகள் கட்டப்பட்டு பயன்பாட்டுக்கு வழங்கப்பட்டுள்ள நிலையில் மேற்கு புறத்தில் உள்ள குளியல் தொட்டி இன்று வரை கட்டித் தரப்படவில்லை. இதனால் அந்த பகுதியைச் சேர்ந்த 50-க்கும் மேற்பட்டோர் மேற்கு பகுதியில் இருந்த இடத்திலேயே குளியல் தொட்டி கட்டி தர வேண்டுமென வலியுறுத்தி சிங்கம்புணரி-மேலூர் சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். சாலைகளில் கற்களை போட்டு வாகனங்களை நிறுத்தி போராட்டம் நடத்தினர். சிங்கம்புணரி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பேச்சுவார்த்தை நடத்தினர்.

இதுகுறித்து பேரூராட்சி மன்ற தலைவர் அம்பலமுத்து கூறுகையில், ஊருணியை சுற்றி நான்கு பகுதியில் இருந்த குளியல் தொட்டிகள் அகற்றப்பட்டு நடைபாதை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதில் நான்கு பகுதிகளுமே மீண்டும் குளியல் தொட்டிகள் அமைத்து தரப்படும் என உத்தரவாதம் அந்த பகுதி மக்களுக்கு வழங்கப்பட்ட நிலையில் 3 பகுதிகளில் குளியல் தொட்டிகள் மீண்டும் அமைக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில் மேற்கு புறத்தில் இருந்த இடத்திலே குளியல் தொட்டி அமைக்கப்பட்டால் கழிவு நீர் மீண்டும் ஊருணிக்குள் செல்லும் வாய்ப்பு உள்ளது. எனவே தெற்கு மற்றும் வடக்கு புறங்களில் கட்டித் தர அந்த பகுதி மக்களுக்கு உத்தரவாதம் அளித்துள்ளோம் என்றார்.


Related Tags :
Next Story