சாலை அமைக்கும் பணிகள்கலெக்டர் மகாபாரதி ஆய்வு


சாலை அமைக்கும் பணிகள்கலெக்டர் மகாபாரதி ஆய்வு
x
தினத்தந்தி 17 July 2023 12:45 AM IST (Updated: 17 July 2023 12:45 AM IST)
t-max-icont-min-icon

கொள்ளிடம் ஒன்றிய பகுதிகளில் சாலை அமைக்கும் பணிகளை கலெக்டர் மகாபாரதி ஆய்வு செய்தார்.

மயிலாடுதுறை

கொள்ளிடம் ஒன்றிய பகுதிகளில் சாலை அமைக்கும் பணிகளை கலெக்டர் மகாபாரதி ஆய்வு செய்தார்.

பள்ளியில் ஆய்வு

மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் அருகே உமையாள்பதி ஊராட்சி விநாயககுடி கிராமத்தில் ஒன்றிய தொடக்கப்பள்ளியில் மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் மகாபாரதி ஆய்வு செய்தார். அப்போது சமையல் கூடத்தில் குழந்தைகளுக்கு சமைக்கப்பட்ட மதிய உணவை சாப்பிட்டு பார்த்தார்.

மேலும் புதிதாக கட்டப்பட்டுள்ள புதிய கட்டிடத்தில் ஆய்வு மேற்கொண்டார். தொடர்ந்து பள்ளியில் பயிலும் குழந்தைகளின் கற்றல் திறன் குறித்து கேட்டறிந்தார்.

சாலை பணிகள்

வடகால் கிராமத்தில் ஊராட்சி வடக்கு தெருவில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் ரூ.4.70 லட்சம் செலவில் சாலை அமைக்கும் பணி, கடவாசல் ஊராட்சியில் ரூ.5 லட்சம் மதிப்பில் புதிதாக அமைக்கப்பட்ட சிமெண்டு சாலை ஆகியவற்றையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

அப்போது சாலையின் தரம் குறத்து கேட்டறிந்தார். தரமான சாலை அமைக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். சாலையை சுத்தியலை கொண்டு சோதித்து பார்த்தார். ஆய்வின்போது மாவட்ட தணிக்கை அலுவலர் கோவிந்தராஜ், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் அருள்மொழி, ரெஜினா ராணி, ஊராட்சி மன்ற தலைவர் கிள்ளிவளவன் மற்றும் என்ஜினீயர்கள் உடன் இருந்தனர்.


Next Story