தேவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை


தேவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை
x
தினத்தந்தி 29 Oct 2022 6:45 PM GMT (Updated: 29 Oct 2022 6:46 PM GMT)

தேவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

சிவகங்கை

காரைக்குடி,

தேவர் குருபூஜையை முன்னிட்டு காரைக்குடியில் உள்ள அவரது உருவ சிலைக்கு காரைக்குடி நகர்மன்ற தலைவர் முத்துத்துரை தலைமையில் மன்ற உறுப்பினர்கள் கார்த்திகேயன், தெய்வானை, கலா, முகமது சித்திக், பசும்பொன் மனோகரன் பிலோமினா, அஞ்சலிதேவி, ராணி ஹேமலதா, திவ்யா, மஞ்சுளா, அமுதா, மலர்விழி, தனம், முன்னாள் இளைஞர் அணி அமைப்பாளர் காரை சுரேஷ் ஆகியோர் மலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

காங்கிரஸ் கட்சியின் சார்பில் மாங்குடி எம்.எல்.ஏ. தலைமையில் முன்னாள் எம்.எல்.ஏ. சுப்புராம், நகர தலைவர் பாண்டி மெய்யப்பன், மாவட்ட செயலாளர் அப்பாவு ராமசாமி, நகர செயலாளர் குமரேசன், கவுன்சிலர் ரெத்தினம், ெரயில்வே தட்சிணாமூர்த்தி, வர்த்தக அணி ராஜேஷ், பாலா ஆகியோர் மாலை அணிவித்து மரியாதையை செலுத்தினர்.


Next Story