ஜவுளிக்கடையில் வேலை பார்த்த 2 பெண் குழந்தை தொழிலாளர்கள் மீட்பு


ஜவுளிக்கடையில் வேலை பார்த்த 2 பெண் குழந்தை தொழிலாளர்கள் மீட்பு
x

ஜவுளிக்கடையில் வேலை பார்த்த 2 பெண் குழந்தை தொழிலாளர்கள் மீட்கப்பட்டனர்.

பெரம்பலூர்

பெரம்பலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஷ்யாம்ளா தேவியின் உத்தரவின்படி பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் தடுப்பு பிரிவு போலீசார் தொழிலாளர் நலத்துறையினர், குழந்தைகள் பாதுகாப்பு அலகு ஆகியவற்றுடன் இணைந்து மாவட்டத்தில் குழந்தை தொழிலாளர்களை பணியில் ஈடுபடுத்தியுள்ளனரா? என்று கடைகள், தொழிற்சாலைகள் மற்றும் கோழி பண்ணைகள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் திடீரென்று சோதனை நடத்தினர்.

சோதனையில் பெரம்பலூர் பழைய பஸ் நிலையம் அருகே உள்ள ஜவுளிக்கடையில் வேலை செய்து வந்த 2 பெண் குழந்தை தொழிலாளர்கள் மீட்கப்பட்டு, மாவட்ட குழந்தைகள் நல குழுமத்திடம் ஒப்படைக்கப்பட்டனர். 18 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளை அபாயகரமான தொழில்களில் ஈடுபடுத்த கூடாது. 14 வயதுக்குட்பட்ட குழந்தைகளை எந்தவொரு பணியிலும் அமர்த்தக்கூடாது. அவ்வாறு பணிக்கு அமர்த்தும் நிறுவனங்களின் உரிமையாளருக்கு 6 மாத காலம் வரை சிறை தண்டனையும் ரூ.50 ஆயிரம் வரை அபராதமும் விதிக்கப்படும். மேலும், குழந்தைகளை பணிகளுக்கு அனுப்பும் பெற்றோர் மீதும் குற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று அவர்கள் எச்சரிக்கை விடுத்தனர்.


Next Story