சாலையை சீரமைக்க கோரிக்கை
சாலையை சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்
மயிலாடுதுறை
மயிலாடுதுறை மாவட்டம் திருக்கடையூர் ஊராட்சிக்கு உட்பட்ட சந்து தெரு செல்லும் சிமெண்டு சாலை சீரமைக்கப்பட்டு பல ஆண்டுகள் ஆகிறது. இந்த சிமெண்டு சாலை மேம்படுத்தப்படாததால் சாலையில் ஜல்லிக்கற்கள் பெயர்ந்து குண்டும்-குழியுமாக காட்சியளிக்கிறது. மேலும் இந்த சாலை வழியாக மோட்டார் சைக்கிள், சைக்கிளில் செல்பவர்களும் பள்ளி கல்லூரி மாணவர்கள் மற்றும் வயதானவர்கள் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகின்றனர் இந்த சாலை சேதமடைந்து மிகவும் மோசமாக உள்ளதால் அடிக்கடி விபத்து ஏற்படுகிறது. எனவே ஜல்லிக்கற்கள் பெயர்ந்து கிடக்கும் திருக்கடையூர் ஊராட்சி சந்து தெரு சாலையை சீரமைக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
Related Tags :
Next Story