சாலையை சீரமைக்க கோரிக்கை


சாலையை சீரமைக்க கோரிக்கை
x

பழுதடைந்த சாலையை சீரமைக்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது

தஞ்சாவூர்

பட்டுக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட வேப்பங்காடு கிராமத்தில் வாண்டையார் தெரு, ஆதிதிராவிடர் தெரு உள்ளிட்ட பகுதிகளில் ஏராளமான குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இவர்கள் வேப்பங்காடு கிராமத்தில் இருந்து கரம்பயம் மற்றும் பாப்பாநாடு, ஒரத்தநாடு, தஞ்சை செல்வதற்கு சாலை வசதி உள்ளது. இந்த சாலை அமைக்கப்பட்டு பல ஆண்டுகளுக்கு மேல் ஆவதால் தற்போது குண்டும்-குழியுமாக காட்சி தருகிறது. இதனால், இந்த சாலையை பயன்படுத்தும் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்படுகின்றனர். குறிப்பாக, இருசக்கர வாகனங்களில் செல்பவர்கள் தடுமாறி கீழே விழுந்து விடுகின்றனர். இந்த பாதையை தவிர்த்து கரம்பயம் செல்ல வேண்டுமென்றால் வேப்பங்காட்டில் இருந்து ஏனாதி, பாலமூர்த்தி, ஆலடிக்கு முளை வந்து அங்கிருந்து வீரக்குறிச்சி வழியாகத்தான் கரம்பயம் செல்ல வேண்டும். அந்த வழியாக செல்ல வேண்டுமென்றால் சுமார் 8 கி.மீ. தூரம் ஆகும். ஆகவே, வேப்பங்காடு கிராம சாலையை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.








Next Story