பள்ளி தூய்மை பணியாளர்களுக்கு உடனடியாக ஊதியம் வழங்க வேண்டும்-மேல்நிலைப்பள்ளி முதுநிலை பட்டதாரி ஆசிரியர் சங்கம் கோரிக்கை


பள்ளி தூய்மை பணியாளர்களுக்கு உடனடியாக ஊதியம் வழங்க வேண்டும்-மேல்நிலைப்பள்ளி முதுநிலை பட்டதாரி ஆசிரியர் சங்கம் கோரிக்கை
x
தினத்தந்தி 19 March 2023 6:45 PM GMT (Updated: 19 March 2023 6:46 PM GMT)

ஒரு வருடமாக ஊதியம் இன்றி பணிபுரியம் பள்ளி தூய்மை பணியாளர்களுக்கு உடனடியாக ஊதியம் வழங்க வேண்டும் என மேல்நிலைப்பள்ளி முதுநிலை பட்டதாரி ஆசிரியர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

சிவகங்கை


ஒரு வருடமாக ஊதியம் இன்றி பணிபுரியம் பள்ளி தூய்மை பணியாளர்களுக்கு உடனடியாக ஊதியம் வழங்க வேண்டும் என மேல்நிலைப்பள்ளி முதுநிலை பட்டதாரி ஆசிரியர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

தூய்மை பணியாளர்கள்

தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி முதுநிலை பட்டதாரி ஆசிரியர் சங்க மாநில தலைவர் இளங்கோவன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:- அரசு பள்ளிகளில் கழிப்பறை சுத்தம் செய்ய, பள்ளி வளாகம் சுத்தம் செய்ய நிரந்தர தூய்மை பணியாளர்களை அரசு பல ஆண்டுகளாக நியமனம் செய்யவில்லை. மாறாக உள்ளாட்சி அமைப்புகள் மூலம் இப்பணியாளர்களை மிக குறைவான ஊதியத்தில் சில ஆண்டுகளுக்கு முன்பு பணி அமர்த்திக்கொள்ள அனுமதி வழங்கியது.

மாதம் உயர் நிலை பள்ளியில் ரூ.2,500-ம், மேல்நிலைப்பள்ளியில் ரூ.3,000 என நிர்ணயித்து தற்காலிகமாக இப்பணிகளை செய்து வருகின்றனர். இவர்களுக்கு கடந்த ஒரு வருடமாக இந்த சொற்ப ஊதியமும் வழங்கப்படவில்லை. பள்ளி தலைமை ஆசிரியர்களிடம் கேட்டால் வட்டார வளர்ச்சி அலுவலகத்திலிருந்து பள்ளி மேலாண்மை குழு கணக்கிற்கு வந்த பின்னர் தீர்மானம் நிறைவேற்றி தொகை வழங்கப்படும் என்கின்றனர். இதனால் அரசு பள்ளிகளில் தூய்மை பணி பராமரிப்பு சிக்கல் நிறைந்ததாக உள்ளது.

ஊதியம் வழங்க வேண்டும்

எந்த துறையிலும் இல்லாத நடவடிக்கையாக பள்ளிகளில் தூய்மை பணி செய்பவர்களுக்கு முறையான நியமனம் இல்லை. சொற்ப ஊதியத்தைக்கூட வருடக்கணக்கில் வழங்குவது இல்லை. ஆனால், அதிகாரிகளின் பள்ளி ஆய்வு மற்றும் பார்வையின் போது கழிப்பறை சுத்தம், பள்ளி வளாக சுத்தம் முறையாக இல்லை என்று தலைமை ஆசிரியர்களுக்கு தண்டனை வழங்கப்படுகிறது. பள்ளிகளில் தூய்மை பணி செய்யும் பணியாளர்களுக்கு குறைந்த பட்ச ஊதியம் நிர்ணயித்து அதை பள்ளி ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்கள் ஊதியம் பெறும் நாளில் கிடைக்கும் வகையில் தலைமை ஆசிரியர்கள் மூலம் நேரடியாக வழங்கி மாணவர்கள் உடல் நலம், பள்ளி வளாக தூய்மை பராமரிப்பு உறுதி செய்யப்பட வேண்டும்.

எனவே ஒரு வருடமாக ஊதியம் இன்றி பணிபுரியம் பள்ளி தூய்மை பணியாளர்களு்கு உடனடியாக ஊதியம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


Next Story