மதுரை எய்ம்ஸ் கட்டுமான பணிகள் குறித்து அறிக்கை


மதுரை எய்ம்ஸ் கட்டுமான பணிகள் குறித்து அறிக்கை
x
தினத்தந்தி 1 Sep 2023 8:45 PM GMT (Updated: 1 Sep 2023 8:45 PM GMT)

மதுரை எய்ம்ஸ் கட்டுமான பணிகள் குறித்து அறிக்கை அளிக்குமாறு மத்திய அரசுக்கு மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.

மதுரை

மதுரை

மதுரை எய்ம்ஸ் கட்டுமான பணிகள் குறித்து அறிக்கை அளிக்குமாறு மத்திய அரசுக்கு மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.

மதுரை எய்ம்ஸ் பணிகள்

மதுரை தோப்பூரில் எய்ம்ஸ் ஆஸ்பத்திரி அமைப்பதற்கான நிதியை ஒதுக்கி கட்டுமான பணிகளை உடனடியாக தொடங்க நடவடிக்கை எடுக்க உத்தரவிடக்கோரி கே.கே.ரமேஷ் என்பவர் கடந்த 2019-ம் ஆண்டு மதுரை ஐகோர்ட்டில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனு மீதான விசாரணையின் போது, 36 மாதங்களில் எய்ம்ஸ் ஆஸ்பத்திரி கட்டுமான பணிகள் முடிந்து பொதுமக்களின் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படும் என்று மத்திய அரசு தரப்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டதை தொடர்ந்து வழக்கு முடித்து வைக்கப்பட்டது.

ஆனால், தற்போது வரை எய்ம்ஸ் ஆஸ்பத்திரி கட்டுமான பணிகள் தொடங்கவில்லை என்றும், எனவே கோர்ட்டு உத்தரவு முறையாக பின்பற்றாததால், மத்திய அரசின் முதன்மை செயலாளர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோர்ட்டு அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்திருந்தார்.

அறிக்கை

இந்த மனு நீதிபதிகள் ரமேஷ், புகழேந்தி ஆகியோர் கொண்ட அமர்வு முன்பு விசாரனைக்கு வந்தது. எய்ம்ஸ் ஆஸ்பத்திரி கட்டுமான பணிக்கான டெண்டர் விடப்பட்டு, கட்டுமான பணிகள் தொடங்கும் நிலையில் உள்ளன என மத்திய அரசு வக்கீல் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து, இந்த விவரங்களை அறிக்கையாக தாக்கல் செய்ய உத்தரவிட்டு விசாரணையை அடுத்த மாதம் 13-ந் தேதிக்கு ஒத்தி வைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.


Next Story