வெம்பக்கோட்டை அணையில் 'ஷட்டர்கள்' பழுது பார்ப்பு


வெம்பக்கோட்டை அணையில் ஷட்டர்கள் பழுது பார்ப்பு
x

வெம்பக்கோட்டை அணையில் ‘ஷட்டர்கள்’ பழுது பார்க்கும் பணி தொடங்கியது.

விருதுநகர்

தாயில்பட்டி,

வெம்பக்கோட்டை அணையில் 'ஷட்டர்கள்' பழுது பார்க்கும் பணி தொடங்கியது.

வெம்பக்கோட்டை அணை

சிவகாசிக்கு குடிநீர் ஆதாரமாக வெம்பக்கோட்டை அணை உள்ளது. இந்த அணையின் இடது பிரதான கால்வாய் வழியாக வெம்பக்கோட்டை, விஜய கரிசல்குளம், சல்வார்பட்டி, சங்கரநத்தம், படந்தால் வரை தண்ணீர் செல்கிறது. மேலும் வலது பிரதான கால்வாய் பனையடிப்பட்டி, பந்துவார்பட்டி, ஒத்தையால் மேட்டுப்பட்டி வரை தண்ணீர் செல்கிறது.

இந்த அணையில் 5 'ஷட்டர்கள்' உள்ளன அதில் 3-வது மற்றும் 4-வது 'ஷட்டர்கள்' பழுதடைந்துள்ளதால் தண்ணீர் வெளியேறிக் கொண்டிருக்கிறது.

பழுது பார்க்கும் பணி

தற்போது மழைக்காலம் தொடங்க இருப்பதால் பழுதடைந்த ஷட்டர்களை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென விவசாயிகள் தொடர்ந்து கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து நேற்று முதல் ஷட்டர்கள் பழுது பார்க்கும் பணியினை பொதுப்பணித்துறை அதிகாரிகள் தொடங்கியுள்ளனர். பழுது பார்க்கும் பணிக்காக அணையில் இருந்து தண்ணீர் சிறிதளவு திறந்து விடப்பட்டதால் வைப்பாற்றில் தண்ணீர் செல்கிறது. இதுகுறித்து அதிகாரிகள் கூறியதாவது:- அணையில் உள்ள பெல்ட்டுகள் புதுப்பிக்கப்படுகிறது. மேலும் ஷட்டர்கள் முழுமையாக செயல்படுகிறதா என ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. இந்த பணி தொடர்ந்து 3 நாட்கள் நடக்கும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.


Related Tags :
Next Story