புனரமைக்கப்பட்ட அண்ணா மேம்பாலம் - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்


புனரமைக்கப்பட்ட அண்ணா மேம்பாலம் - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்
x

புனரமைக்கப்பட்ட அண்ணா மேம்பாலத்தை மக்கள் பயன்பாட்டிற்காக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.

சென்னை,

சென்னை அண்ணாசாலையில் கடந்த 1973-ம் அண்டு கட்டப்பட்ட அண்னா மேம்பாலம், கடந்த ஆண்டு பொன்விழாவை நிறைவு செய்தது. இதையடுத்து இந்த மேம்பாலத்தை ரூ.8.85 கோடி மதிப்பீட்டில் புனரமைக்கும் பணி நடைபெற்று வந்தது.

இந்த புனரமைப்பு பணிகள் நிறைவடைந்த நிலையில், புனரமைக்கப்பட்ட அண்ணா மேம்பாலத்தை மக்கள் பயன்பாட்டிற்காக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார். மேம்பாலத்தின் கீழே உள்ள பூங்காக்கள் புதுப்பொலிவுடனும், தூண்கள் கான்கிரீட் கொண்டும் புனரமைக்கப்பட்டுள்ளன.

பாலத்திற்கு கீழே வைக்கப்பட்டுள்ள அண்ணா சிலையையும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் எ.வ.வேலு, சென்னை மாநகர மேயர் பிரியா, தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.


Next Story