ஏரி ஆக்கிரமிப்பு அகற்றம்


ஏரி ஆக்கிரமிப்பு அகற்றம்
x
தினத்தந்தி 18 Feb 2023 6:45 PM GMT (Updated: 18 Feb 2023 6:46 PM GMT)

சவேரியார்பாளையம் ஏரி ஆக்கிரமிப்பு அகற்றம்

கள்ளக்குறிச்சி

மூங்கில்துறைப்பட்டு

சங்கராபுரம் ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட சவேரியார் பாளையத்தில் பொதுப்பணித்துறைக்கு சொந்தமாக 50 ஹெட்டர் பரப்பளவு கொண்ட ஏரி உள்ளது. இதை சிலர் ஆக்கிரமித்து வீடுகள் கட்டியும், பயிர் சாகுபடியும் செய்து வந்தனர். மேலும் தனிநபர் ஒருவர் அதிகளவில் ஆக்கிரமிப்பு செய்து அரசு அறிவிக்கும் குளம் மற்றும் கரைகள் அமைப்பதை தடுத்து வந்தார். ஏரியில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.

இதையடுத்து பொதுப்பணித்துறை அதிகாரிகள் மற்றும் ஊராட்சி மன்ற தலைவர் பிலோமினாள்இருதயராஜ் தலைமையில் துணை தலைவர் லீமாரோஸ் அருள்தாஸ் மற்றும் ஊர் முக்கியஸ்தர்கள் முன்னிலையில் ஏரியை ஆக்கிரமித்து கட்டப்பட்ட வீடுகள் மற்றும் சாகுபடி செய்த பயிர்கள் பொக்லைன் எந்திரம் மூலம் அகற்றப்பட்டது.சவேரியார்பாளையம்



Next Story