சீர்காழி கழுமலையாற்றில் ஆகாயத்தாமரைகள் அகற்றம்


சீர்காழி கழுமலையாற்றில் ஆகாயத்தாமரைகள் அகற்றம்
x

சீர்காழி கழுமலையாற்றில் ஆகாயத்தாமரைகள் அகற்றம்

மயிலாடுதுறை

சீர்காழி

'தினத்தந்தி' செய்தி எதிரொலியாக சீர்காழி கழுமலையாற்றில் ஆகாயத்தாமரைகள் அகற்றப்பட்டது.

பாசன வாய்க்கால்

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் கழுமலையாறு பாசன வாய்க்கால் உள்ளது இந்த வாய்க்காலை நம்பி மேலத்தேனூர், தேனூர், கொண்டல், வள்ளுவக்குடி, அகணி, நிம்மேலி, மருதங்குடி, கொட்டாயமேடு, பத்தங்குடி, ஆலஞ்சேரி, சீர்காழி, தென்பாதி, திட்டை, தில்லைவிடங்கன், திருத்தோணிபுரம், செம்மங்குடி உள்ளிட்ட கிராமங்களை சேர்ந்த விளைநிலங்கள் பாசன வசதி பெற்று வருகின்றனர். கழுமலையார் பாசன வாய்க்காலில் புதிய பஸ் நிலையம், கொள்ளிடம் முக்கூட்டு, ெரயில்வே ரோடு, புழுகாபேட்டை உள்ளிட்ட இடங்களில் ஆகாயத்தாமரைகள் மண்டி நீரின் போக்கை தடுத்து வந்தது.

இதன் காரணமாக விவசாயிகள் முறையாக பாசன வசதி பெற முடியாமல் அவதிக்கு உள்ளாகி வந்தனர். மேலும் ஆகாயத்தாமரை மண்டி துர்நாற்றம் வீசுவதால் அப்பகுதியை சேர்ந்த குடியிருப்பு வாசிகள் மற்றும் விவசாயிகள் கடும் இன்னலுக்கு உள்ளாகினர்.

ஆகாயத்தாமரைகள் அகற்றும் பணி

எனவே பொதுப்பணி துறையினர் கொண்டல் முதல் திருத்தோணிபுரம் வரை கழுமலையாறு பாசன வாய்க்காலில் ஆக்கிரமித்துள்ள ஆகாயத்தாமரைகளை அகற்ற வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது. இதுகுறித்து கடந்த சில தினங்களுக்கு முன்பு 'தினத்தந்தி'யில் படத்துடன் செய்தி வெளியிடப்பட்டது. இதன் எதிரொலியாக நேற்று நகர் மன்ற தலைவர் துர்கா ராஜசேகரன் தலைமையில் சீர்காழி புதிய பஸ் நிலையம் அருகில் உள்ள கழுமலையாற்றில் மண்டி கிடக்கும் ஆகாயத்தாமரைகளை பொக்லின் எந்திரம் மூலம் அகற்றும் பணி நடந்தது. அப்போது நகராட்சி ஆணையர் (பொறுப்பு) ராஜகோபால், பணி மேற்பார்வையாளர் விஜயேந்திரன், வருவாய் ஆய்வாளர் ராஜ கணேஷ், தி.மு.க. நகர இளைஞரணி அமைப்பாளர் ராஜசேகரன், வார்டு செயலாளர் சக்திவேல் உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர். உடனடியாக நடவடிக்கை எடுத்த நகராட்சிக்கும், செய்தி வெளியிட்ட 'தினத்தந்தி' நாளிதழுக்கும் அப்பகுதி பொதுமக்கள் நன்றி தெரிவித்தனர்.


Next Story