13 ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் 3 ஆண்டுகளுக்கு மேலாக ஒரே இடத்தில் பணியாற்றிய 60 அதிகாரிகள் இடமாற்றம்


13 ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில்  3 ஆண்டுகளுக்கு மேலாக ஒரே இடத்தில் பணியாற்றிய 60 அதிகாரிகள் இடமாற்றம்
x
தினத்தந்தி 3 March 2023 7:00 PM GMT (Updated: 3 March 2023 7:00 PM GMT)

மதுரை மாவட்டத்தில் 13 ஊராட்சி ஒன்றியங்களில் 3 ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றிய 60 பேர் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

மதுரை

திருப்பரங்குன்றம்,


மதுரை மாவட்டத்தில் 13 ஊராட்சி ஒன்றியங்களில் 3 ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றிய 60 பேர் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

3 ஆண்டுகளாக ஒரே இடத்தில் பணி

மதுரை மாவட்டத்தில் உள்ள 13 ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் 3 ஆண்டுகளுக்கு மேலாக தொடர்ந்து ஒரே இடத்தில் அதிகாரிகள் சிலர் பணியாற்றி வந்தனர். அதனால் ஒரு சில ஊராட்சி ஒன்றியங்களில் அரசு திட்டங்கள் செயல்பாட்டில் தொய்வு ஏற்பட்டு வந்தது. இது குறித்து மாவட்ட நிர்வாகத்திற்கு ஊராட்சி ஒன்றிய அலுவலக வட்டாரங்களில் இருந்து புகார்கள் சென்றன. அலுவலர்கள் சிலர ்பணியிடம் மாற்றம் கோரியும் மனுக்கள் கொடுத்து இருந்தனர்.

இதனையொட்டி 13 ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் இருந்து 3 ஆண்டுகளுக்கு மேலாக ஒரே அலுவலகத்தில் பணியாற்றிய 60 பேரை கலெக்டர் அனிஷ்சேகர் இடம் மாற்றம் செய்து உத்தரவிட்டுள்ளார்.

அதில் திருப்பரங்குன்றம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் இருந்து தலைமையிடத்து துணை வட்டார வளர்ச்சி அலுவலர் (பொது), ஏ.டி.ராஜேந்திரசேகர் அலங்காநல்லூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டார். இந்த பணி இடத்திற்கு திருமங்கலம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் இருந்து எஸ்.வாசுகி இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

13 ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில்

திருப்பரங்குன்றம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் மகாத்மா தேசிய ஊரக வேலைவாய்ப்பு பிரிவு தலைமையிடத்து துணை வட்டார வளர்ச்சி அலுவலர் சி.சக்திவேல் வாடிப்பட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திற்கு மாற்றப்பட்டுள்ளார்.இந்த பணியிடத்திற்கு மதுரை கிழக்கு ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் இருந்து சரவணன் முத்துகிருஷ்ணன் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

திருப்பரங்குன்றம் ஊராட்சி ஒன்றிய உதவியாளர் மோகன் மதுரை கிழக்கு ஒன்றியத்திற்கு மாற்றப்பட்டுள்ளார் இந்த பணி இடத்திற்கு மதுரை (ஊராட்சிகள்) உதவி இயக்குனர் அலுவலகத்தில் இருந்து உதவியாளர் ஜெ.ரகுபதி இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

.திருப்பரங்குன்றம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் வி.சுபாஷினி இதே அலுவலகத்தில் சத்துணவு பிரிவுக்கும் சத்துணவு பிரிவு மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் எம்.ஜெயராமன் இதே அலுவலகத்தில் மண்டலம் (2) பிரிவுக்குமாக ஒரே அலுவலகத்திற்குள்ளே பணி இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.


Next Story