இளம்பெண் உடலை வாங்க மறுத்து உறவினர்கள் மறியல்


இளம்பெண்  உடலை வாங்க மறுத்து உறவினர்கள் மறியல்
x

கரூர் அருகே இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட விவகாரத்தில் அவரது உடலை வாங்க மறுத்து உறவினர்கள் மறியலில் ஈடுபட முயன்றனர். இதையடுத்து போலீசார் நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டது.

கரூர்

காதல் திருமணம்

கரூர் மாவட்டம், திருக்காடுதுறை பகுதியை சேர்ந்தவர் பூபேஸ் (வயது 32). இவர் நாமக்கல் மாவட்டம் ராமதேவம் பகுதியில் பால் வேன் ஓட்டிக் கொண்டிருந்தார். அப்போது அதே பகுதியை சேர்ந்த காயத்ரி என்பவரை பூபேஸ் காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

பின்னர் திருக்காடுதுறையில் உள்ள பூபேசின் வீட்டில் குடியிருந்து வந்தனர். இவர்களுக்கு மிதுன் (3) என்ற குழந்தை உள்ளது.

தற்கொலை

இந்நிலையில் பூபேஸ் தினமும் குடித்துவிட்டு வீட்டுக்கு வந்து தனது மனைவி காயத்ரியிடம் தகராறில் ஈடுபட்டு வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்றுமுன்தினம் காலையும் கணவன், மனைவி இடையே வாய்த்தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் மனமுடைந்து காணப்பட்ட காயத்ரி மின்விசிறியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

பின்னர் சகோதரர் சசிகுமார், தனது சகோதரி சாவில் சந்தேகம் இருப்பதாகவும், சம்பந்தப்பட்டவர்களை கைது செய்ய வேண்டும் எனவும் ேவலாயுதம்பாளையம் ேபாலீஸ் நிைலயத்தில் புகார் கொடுத்தார். அதன்ேபரில் ேபாலீசார் வழக்குப்பதிவு ெசய்தனா்.

சாைல மறியல் முயற்சி

பின்னர் காயத்ரியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கரூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.இந்நிலையில் காயத்ரிவின் சாவில் சந்தேகம் இருப்பதாகவும், சாவிற்கு காரணமானவர்களை கைது செய்ய வேண்டும் எனக்கூறி அவரது உறவினர்கள், உடலை வாங்க மறுத்து ேநற்று காைல காந்திகிராமம் பகுதியில் உள்ள கரூர்-திருச்சி சாலையில் மறியலில் ஈடுபட முயன்றனர்.

ேபச்சுவார்த்தை

இதுகுறித்து தகவலறிந்த கரூா் துணை போலீஸ் சூப்பிரண்டு சரவணன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து காயத்ரி உறவினர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அப்போது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் உறுதியளித்தனா். இதில் உடன்பாடு ஏற்பட்டதையடுத்து அனைவரும் அங்கிருந்து கலைந்து சென்றனா்.


Next Story