கூட்டுறவு சர்க்கரை ஆலையில் ஒத்திகை நிகழ்ச்சி
தீயணைப்புத்துறை சார்பில் கூட்டுறவு சர்க்கரை ஆலையில் ஒத்திகை நிகழ்ச்சி நடந்தது.
தர்மபுரி
பாப்பிரெட்டிப்பட்டி:
பாப்பிரெட்டிப்பட்டி அடுத்த சுப்பிரமணிய சிவா கூட்டுறவு சர்க்கரை ஆலையில் தீயணைப்புத்துறை சார்பில் ஒத்திகை நிகழ்ச்சி நடந்தது. இதற்கு ஆலையின் தலைவர் விஸ்வநாதன் தலைமை தாங்கினார். தனிஅலுவலரும், மாவட்ட வருவாய் அலுவலர் ரகமத்துல்லாகான் முன்னிலை வகித்தார். பாப்பிரெட்டிப்பட்டி தீயணைப்பு துறை நிலைய அலுவலர் செல்வமணி தலைமையில், தீயணைப்பு துறையினர் ஒத்திகை நிகழ்ச்சியை செய்து காட்டினர். தீவிபத்துகளை தடுப்பது, பொதுமக்கள் தங்களை பாதுகாத்து கொள்வது, வெள்ளத்தில் சிக்கி தவிப்பவர்களுக்கு முதலுதவி, காப்பாற்றுவது குறித்து செயல்விளக்கம் அளித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இந்த நிகழ்ச்சியில் கூட்டுறவு சர்க்கரை ஆலை அலுவலர்கள், பணியாளர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story