வட்டார வளர்ச்சி அலுவலர் தரையில் அமர்ந்து தர்ணா


வட்டார வளர்ச்சி அலுவலர் தரையில் அமர்ந்து தர்ணா
x

கழிவறை கட்ட பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் ஆத்திரம் அடைந்த வட்டார வளர்ச்சி அலுவலர் தரையில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டார்.

திருப்பத்தூர்

ஆம்பூரை அடுத்த துத்திப்பட்டு அம்பேத்கர் நகர் பகுதியில் தொடக்கப் உள்ளது. இந்த பள்ளியில் படிக்கும் மாணவிகளுக்காக சுமார் ரூ.5.11 லட்சம் மதிப்பீட்டில் கழிவறை அமைக்கப்பட உள்ளது. இதற்காக அதிகாரிகள் பள்ளியின் அருகில் இடத்தை தேர்வு செய்தனர். ஆனால் அதற்கு ஒரு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்ததால் வேறு இடத்தில் கழிவறை கட்ட அதிகாரிகள் முடிவு செய்தனர்.

இந்தநிலையில் நேற்று மாதனூர் வட்டார வளர்ச்சி அலுவலர் கிருஷ்ணன் தலைமையிலான அதிகாரிகள் பொக்லைன் எந்திரத்துடன் பணியை தொடங்க வந்தனர். அப்போது வேறு ஒரு தரப்பினர் இங்கு கழிவறை கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

இதனால் வட்டார வளர்ச்சி அலுவலர் கிருஷ்ணன் இந்த இடத்தில் தான் அரசு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. கழிவறை கட்டிட பணிகள் இங்கே தான் நடைபெறும் என தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த அந்த தரப்பினர் அங்கிருந்து கலைந்து சென்றனர். பின்னர் கட்டிடப் பணிகள் தொடங்கியது. இச்சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.


Related Tags :
Next Story