விநாயகர் சதுர்த்தி விழா குறித்து இந்து முன்னணி ஆலோசனை கூட்டம்


விநாயகர் சதுர்த்தி விழா குறித்து  இந்து முன்னணி ஆலோசனை கூட்டம்
x

கம்பத்தில் விநாயகர் சதுர்த்தி விழா குறித்து இந்து முன்னணி சார்பில் ஆலோசனை கூட்டம் நடந்தது

தேனி

தேனி தெற்கு மாவட்ட கம்பம் நகர இந்து முன்னணி சார்பில் விநாயகர் சதுர்த்தி விழா குறித்த ஆலோசனை கூட்டம் கம்பம் கம்பராய பெருமாள் கோவிலில் நடைபெற்றது. இதற்கு தேனி தெற்கு மாவட்ட செயலாளர் ஆர்.எஸ்.ராமகிருஷ்ணன் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் சசிக்குமார் முன்னிலை வகித்தார். நகர பொறுப்பாளர் ஹரிஹரன் வரவேற்றார்.

சிறப்பு அழைப்பாளராக மதுரை கோட்ட செயலாளர் கோம்பை கணேசன் கலந்து கொண்டு விநாயகர் சதுர்த்தி விழாவை சிறப்பாக கொண்டாடுவது, விநாயகர் சதுர்த்தி விழாவில் கம்பம் நகரில் 101 இடங்களில் சிலைகள் பிரதிஷ்டை செய்வது குறித்து பேசினார். கூட்டத்தில் நிர்வாகி அப்சரா முருகேசன், பாரதீய ஜனதா கட்சி நகர தலைவர் ஈஸ்வரன், செயலாளர் சீனிவாசகம் மற்றும் இந்து இயக்க கமிட்டி பொறுப்பாளர்கள் கலந்துகொண்டனர்.


Next Story