தொலைந்து போன ரூ.15 லட்சம் செல்போன்கள் மீட்பு


தொலைந்து போன ரூ.15 லட்சம் செல்போன்கள் மீட்பு
x

ராமநாதபுரம் மாவட்டத்தில் தொலைந்து போன ரூ.15 லட்சம் மதிப்பிலான 115 செல்போன்கள் சைபர் கிரைம் போலீசார் மீட்டு உரியவர்களிடம் ஒப்படைத்தனர்.

ராமநாதபுரம்

ராமநாதபுரம் மாவட்டத்தில் தொலைந்து போன ரூ.15 லட்சம் மதிப்பிலான 115 செல்போன்கள் சைபர் கிரைம் போலீசார் மீட்டு உரியவர்களிடம் ஒப்படைத்தனர்.

செல்போன்கள்

ராமநாதபுரம் மாவட்டத்தில் தொலைந்த செல்போன்களை கண்டுபிடிக்க எடுக்கப்பட்ட நடவடிக்கையின் பயனாக கடந்த ஆண்டு மொத்தம் 561 செல்பேன்கள் சைபர் கிரைம் போலீசார் மூலம் கண்டுபிடித்து உரிய நபர்களிடம் ஒப்படைக்கப்பட்டு உள்ளது. இந்த ஆண்டு ஏற்கனவே 240 செல்போன்கள் கண்டுபிடிக்கப்பட்டு உரிய நபர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது மேலும் 115 செல்போன்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த செல்போன்களை உரியவர்களிடம் ஒப்படைக்கும் நிகழ்ச்சி மாவட்ட காவல் அலுவலகத்தில் நடைபெற்றது. போலீஸ் சூப்பிரண்டு தங்கதுரை செல்போன்களை உரியவர்களிடம் ஒப்படைத்தார். அப்போது அவர் கூறியதாவது:-

மாவட்டத்தில் சைபர் கிரைம் போலீசாரின் உதவியுடன் இந்த ஆண்டு 2-வது கட்டமாக 115 செல்போன்கள் கண்டுபிடிக்கப்பட்டு உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இதன் மதிப்பு ரூ.15 லட்சம் ஆகும். மீதமுள்ள சுமார் 219 செல்போன்களை நவீன தொழில்நுட்ப உதவியுடன் கண்டுபிடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

நம்ப வேண்டாம்

பொதுமக்கள், கல்லூரி மாணவர்கள் தாஙகள் பயன்படுத்தும், செல்போன்களை கவனமாக கையாள வேண்டும். நீங்கள் கணக்கு வைத்துள்ள எந்த வங்கியின் மேலாளர் மற்றும் ஊழியர்கள் யாரும் தொலைபேசியில் அழைத்து உங்கள் வங்கி கணக்கு எண், ஓ.டி.பி. விவரங்களை கேட்க மாட்டார்கள். வங்கியின் வாடிக்கையாளர் சேவை எண், வங்கி கணக்கு புத்தகம் மற்றும் ஏ.டி.எம். கார்டில் உள்ள எண்களை மட்டுமே தொடர்பு கொள்ள வேண்டும். இணையத்தில் தேடி எந்த எண்ணையும் தொடர்பு கொள்ளக்கூடாது. முடிந்தவரை உங்களின் வங்கிக்கு நேரில் சென்று எந்த கோரிக்கையையும் கேட்டு தெரிந்து கொள்ள வேண்டும். பரிசுப்பொருள், கடன் தருவதாகவும், ஆன்லைன் வேலை என்று கூறுபவர்களையும் நம்ப வேண்டாம்.


Related Tags :
Next Story