தமிழகத்திற்கு அடுத்த 15 நாட்கள் தினமும் 5 ஆயிரம் கனஅடி நீர் திறக்க கர்நாடகாவுக்கு பரிந்துரை


தமிழகத்திற்கு அடுத்த 15 நாட்கள் தினமும் 5 ஆயிரம் கனஅடி நீர் திறக்க கர்நாடகாவுக்கு பரிந்துரை
x
தினத்தந்தி 12 Sep 2023 11:46 AM GMT (Updated: 12 Sep 2023 2:30 PM GMT)

அடுத்த 15 நாட்கள் தமிழகத்திற்கு தினமும் 5 ஆயிரம் கனஅடி நீர் திறக்க கர்நாடகாவுக்கு காவிரி ஒழுங்காற்று குழு பரிந்துரைத்துள்ளது.

சென்னை,

காவிரியில் தண்ணீர் திறந்து விடுவது தொடர்பாக கர்நாடக மாநிலம் மற்றும் தமிழ்நாடு இடையே பிரச்சினை இருந்து வருகிறது. ஆகஸ்ட், செப்டம்பர் மாதத்திற்கான நீரை திறந்து விட கர்நாடக அரசுக்கு உத்தரவிட வேண்டும் என தமிழக அரசு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. அதேவேளையில், வழக்கமான நடைமுறையின்படி தண்ணீர் திறந்துவிட உத்தரவு பிறப்பிக்கக் கூடாது என்றும் கர்நாடக அணைகளில் தண்ணீர் மோதுமான அளவில் இல்லை என்றும் கர்நாடக அரசு தெரிவித்து வருகிறது.

இந்த நிலையில் டெல்லியில் காவிரி நதிநீர் ஒழுங்காற்று குழு இன்று (செவ்வாய்க்கிழமை) கூடியது. இதில் தமிழக அரசு சார்பில் கர்நாடகத்தில் உள்ள காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழையின் அளவு, அங்குள்ள அணைகளில் உள்ள தண்ணீரின் அளவு உள்ளிட்ட விவரங்கள் தெரிவிக்கப்பட்டன. இவற்றை ஆய்வு செய்த பிறகு, அடுத்த 15 நாட்கள் தமிழகத்திற்கு தினமும் 5 ஆயிரம் கனஅடி நீர் திறக்க கர்நாடக அரசுக்கு காவிரி ஒழுங்காற்று குழு பரிந்துரை செய்துள்ளது.


Next Story