மீன்பிடிக்க செல்ல தயாராகி வரும் ராமேஸ்வரம் மீனவர்கள்


ராமேஸ்வரத்தில் விசைப்படகு மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல தேவையான ஐஸ் கட்டி, மீன்பிடி வலை உள்ளிட்ட சாதனங்களை ஏற்றும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

ராமேஸ்வரம்:

தமிழகத்தில் ஆண்டுதோறும் ஏப்ரல் 15 முதல் ஜூன் 14-ந்தேதி வரை 61 நாட்கள் மீன்களின் இனப்பெருக்க காலமாக கருதி விசைப்படகு மூலம் கடலுக்குள் சென்று மீன்பிடிக்க தமிழக அரசால் தடை விதிக்கப்படும். அதேபோல் இந்த ஆண்டும் கடந்த ஏப்ரல் 15 முதல் விசைப்படகு மூலம் கடலுக்கு மீன்பிடிக்க மீனவர்கள் செல்ல தடை விதிக்கப்பட்டது.

இதனால் மீனவர்கள் கடலுக்கு செல்லாமல் தங்கள் படகுகளை கரையில் நிறுத்தி வைத்தனர். இந்த தடைக் காலத்தில் மீனவர்கள் தங்கள் படகுகளை சரி செய்யும் பணியில் ஈடுபட்டு வந்தனர்.

இந்நிலையில் 61 நாட்கள் மீன்பிடி தடைகாலம் இன்று முடிவடைகின்ற நிலையில் நள்ளிரவு முதல் ராமேஸ்வரத்தில் விசைப்படகு மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல திட்டமிட்டுள்ளனர். அதற்காக துறைமுகப் பகுதியில் இருந்து படகுகளில் ஐஸ்கட்டி, மீன்பிடி வலை உள்ளிட்ட சாதனங்களை ஏற்றும் பணியில் மீனவர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.


Next Story