ராமஜெயம் கொலை வழக்கு: 8 பேர் உண்மை கண்டறியும் சோதனைக்கு ஒப்புதல்


ராமஜெயம் கொலை வழக்கு:  8 பேர் உண்மை கண்டறியும் சோதனைக்கு ஒப்புதல்
x

இன்று நடைபெற்ற விசாரணையில் மோகன் ராம், நரைமுடி கணேசன், திணேஷ், செந்தில் ஆகியோர் நேரில் ஆஜராகாத நிலையில் அவர்களை வரும் 17-ந்தேதி நேரில் ஆஜராக வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டார்.

சென்னை,

தி.மு.க. முதன்மை செயலாளரும், நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சருமான கே.என்.நேருவின் தம்பி ராமஜெயம். தொழிலதிபரான இவர் கடந்த 2012-ம் ஆண்டு மார்ச் மாதம் 29-ந் தேதி அதிகாலையில் திருச்சி தில்லைநகரில் உள்ள அவரது வீட்டில் இருந்து நடைபயிற்சி சென்றபோது, மர்ம நபர்களால் காரில் கடத்தி கொலை செய்யப்பட்டார்.

அவரது உடல் கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் திருச்சி-கல்லணை சாலையில் பொன்னிடெல்டா பகுதியில் காவிரி கரையோரம் கிடந்தது. பெரும் பரபரப்பை ஏற்படுத்திய வழக்கில் 10 ஆண்டுகளாக முன்னேற்றம் இல்லாத நிலையில் தற்போது சிறப்பு புலனாய்வு குழு விசாரணை நடத்தி வருகிறது. இதில், பல்வேறு கட்ட விசாரணைக்கு பிறகு 13 பேரிடம் உண்மை கண்டறியும் சோதனை நடத்த போலீசார் முடிவு செய்தனர். இது தொடர்பான வழக்கு இன்று நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது,

சத்யராஜ், லட்சுமி நாராயணன், சாமி ரவி, ராஜ்குமார், சிவா, சுரேந்தர், கலைவாணன் மாரிமுத்து ஆகிய 8 பேரும் ஒப்புக்கொண்டுள்ளனர். உண்மை கண்டறியும் சோதனைக்கு தென்கோவன் என்கிற சண்முகம் என்பவர் சம்மதம் தெரிவிக்கவில்லை. இதையடுத்து வழக்கு வரும் 17 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. அன்றைய தினம் உண்மை கண்டறியும் சோதனை நடைபெறும் தேதி குறித்து தெரிவிக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.


Next Story