ராஜகோபாலசாமி கோவில் தேர் கட்டும் பணி தொடக்கம்


ராஜகோபாலசாமி கோவில் தேர் கட்டும் பணி தொடக்கம்
x

மன்னார்குடி ராஜகோபாலசாமி கோவில் தேரோட்டத்திற்கு, தேர் கட்டும் பணி தொடங்கியுள்ளது.

திருவாரூர்

மன்னார்குடி:

மன்னார்குடி ராஜகோபாலசாமி கோவில் தேரோட்டத்திற்கு, தேர் கட்டும் பணி தொடங்கியுள்ளது.

பங்குனி திருவிழா

மன்னார்குடி ராஜகோபாலசாமி கோவில் புகழ்பெற்ற வைணவ கோவில்களில் ஒன்றாக விளங்குகிறது. ஆண்டு முழுவதும் உற்சவம் நடக்கும் பெருமாள் கோவில்களில் ஒன்றான மன்னார்குடி ராஜகோபாலசாமி கோவிலில் நடக்கும் பங்குனி திருவிழா மிகவும் பிரசித்தி பெற்றது. 18 நாட்கள் உற்சவமும் 12 நாட்கள் விடையாற்றி விழா என 30 நாட்களும் மன்னார்குடி திருவிழாகோலம் பூண்டிருக்கும். அதன்படி இந்த ஆண்டு திருவிழா கடந்த 11-ந்தேதி கொடி ஏற்றத்துடன் தொடங்கியது.

தேரோட்டம்

பங்குனி திருவிழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் நாளை மறுநாள்(திங்கட்கிழமை) நடைபெற உள்ளது.

தேரோட்டத்திற்கு தேரை தயார் செய்யும் பணியும், சாரம் அமைக்கும் பணியும் தற்போது தொடங்கியுள்ளது. தேரை கட்டும் பணியில் 20-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.


Next Story