வயல்களில் தேங்கி கிடக்கும் மழைநீர்


வயல்களில் தேங்கி கிடக்கும் மழைநீர்
x

திருமருகல் அருகே தரைப்பாலத்தில் அமைக்கப்பட்டிருந்த குழாய் அகற்றப்பட்டதால் வெளியேற வழியின்றி வயல்களில் மழைநீர் தேங்கி கிடப்பதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

நாகப்பட்டினம்

திட்டச்சேரி:

திருமருகல் அருகே தரைப்பாலத்தில் அமைக்கப்பட்டிருந்த குழாய் அகற்றப்பட்டதால் வெளியேற வழியின்றி வயல்களில் மழைநீர் தேங்கி கிடப்பதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

வடிகால் வாய்கால்

நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் இடையாத்தங்குடி ஊராட்சி நடுத்தெருவில் 50-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.இந்த தெருவை சுற்றியும் விவசாய நிலங்கள் உள்ளன.

இந்த நடுத்தெருவில் இருந்து கீழத்தெருவிற்கு செல்லும் சாலையில் உள்ள வடிகாலில் தரைப்பாலம் அமைக்கப்பட்டு, அதன் அடியில் பெரிய குழாய் பதிக்கப்பட்டது. இந்த குழாய் மூலம் மழை காலங்களில் வயல்களில் தேங்கும் தண்ணீல் வடிகால் வாய்க்காலில் வெளியேறி வந்தது.

குழாய் அகற்றம்

இந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு இந்த பகுதியில் சாலை அமைக்கும் பணி நடந்த போது இந்த தரைப்பாலம் இடிக்கப்பட்டு குழாய் அகற்றப்பட்டது. இதனால் வயல்களில் இருந்து மழைநீர் வெளியேற்ற முடியாமல் தேங்கி கிடக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

கடந்த வாரம் மழை பெய்ததால், இந்த பகுதியில்அறுவடைக்கு தயார் நிலையில் உள்ள வயல்களில் மழைநீர் தேங்கி கிடக்கிறது. மழைநீர் தேங்கி கிடப்பதால் நெற்பயிர்கள் பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளதால் விவசாயிகள் கவலை அடைந்துள்னர். மேலும் நடுத்தெருவில் மழைநீர் வடிய வழியில்லாமல் தேங்கி நிற்பதால் துர்நாற்றம் வீசுகிறது.மேலும் கொசு உற்பத்தியாகி அப்பகுதியில் பொதுமக்களுக்கு தொற்று நோய்கள் ஏற்படும் அபாய உள்ளது.

வயல்களில் தேங்கி கிடக்கும் மழைநீர்

இதுகுறித்து அப்பகுதியை சேர்ந்த விவசாயி கிருஷ்ணமூர்த்தி கூறுகையில்:-இப்பகுதியில் நான் 2 ஏக்கரில் விவசாயம் செய்து வருகிறேன். இந்த பகுதியில் உள்ள வயலில் இருந்து மழைநீர் வடிய சாலையின் குறுக்கே அமைக்கப்பட்டிருந்த குழாய், சாலை அமைக்கும் பணியின் போது அகற்றப்பட்டது. இதனால் வயல்களில் தேங்கி கிடக்கும் மழைநீர் வடிய முடியாமல் உள்ளது.மேலும் தேங்கி கிடக்கும் மழைநீரால் அறுவடைக்கு தயாரான சம்பா நெற்பயிர்கள் மூழ்கி முளைக்கும் நிலை உள்ளது.

இது குறித்து சம்பந்தப்பட்ட ஊராட்சி ஒன்றிய அலுவலகம் மற்றும் ஊராட்சி நிர்வாகத்திடம் பலமுறை புகார் தெரிவித்தும், இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என அப்பகுதி மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடன் நடவடிக்கை எடுத்து வயல்களில் தேங்கி கிடக்கும் மழைநீர் வடிய குழாய் அமைத்து தர சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே விவசாயிகள் கோரிக்கையாக உள்ளது என்றார்.


Next Story