நாமக்கல்லில் அதிகபட்சமாக 50 மி.மீட்டர் மழைபதிவு


நாமக்கல்லில் அதிகபட்சமாக 50 மி.மீட்டர் மழைபதிவு
x

நாமக்கல்லில் அதிகபட்சமாக 50 மி.மீட்டர் மழைபதிவு

நாமக்கல்

நாமக்கல் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ச்சியாக மழை பெய்து வருகிறது. நேற்று முன்தினம் இரவு பரவலாக பெரும்பாலான பகுதிகளில் மழை பெய்தது. அதிகபட்சமாக நாமக்கல் சுற்று வட்டார பகுதிகளில் 50 மி.மீட்டர் மழைபதிவானது. நேற்று காலை 7 மணி நிலவரப்படி மாவட்டத்தில் பதிவான மழை அளவு மி.மீட்டரில் வருமாறு :-

நாமக்கல் கலெக்டர் அலுவலகம்-50, நாமக்கல் நகரம்-48, சேந்தமங்கலம்-32, மோகனூர்-31, பரமத்திவேலூர்-27, கொல்லிமலை-26, புதுச்சத்திரம்-11, திருச்செங்கோடு-11, எருமப்பட்டி-10, குமாரபாளையம்-3, ராசிபரம்-2. மாவட்டத்தின் மொத்தமழை அளவு 251 மி.மீட்டர் ஆகும்.


Next Story