ராசிபுரத்தில் மழை; பொதுமக்கள் மகிழ்ச்சி


ராசிபுரத்தில் மழை; பொதுமக்கள் மகிழ்ச்சி
x

ராசிபுரத்தில் மழை; பொதுமக்கள் மகிழ்ச்சி

நாமக்கல்

ராசிபுரம்:

ராசிபுரம் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில் கடந்த சில நாட்களாக விட்டு விட்டு மழை பெய்து வந்தது. இந்த நிலையில் ராசிபுரத்தில் நேற்று மாலையில் வானத்தில் கருமேகம் சூழ்ந்து மழை பெய்தது. இதனால் ராசிபுரம் நகரில் கழிவுநீர் கால்வாயில் தண்ணீர் நிரம்பி தெருக்களில் பெருக்கெடுத்து ஓடியது. அதேபோல் ராசிபுரம் சுற்றுவட்டார கிராமங்களிலும் மழை பெய்தது. இதனால் வயல்களில் தண்ணீர் தேங்கி நின்றது. இந்த மழையால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.


Next Story