கேரளாவை போல் தமிழகத்திலும் அரசு டாக்சி சேவை செயலி - மக்கள் நீதி மய்யம் வலியுறுத்தல்
தமிழகத்தில் அரசு உதவியுடன், தனியார் மற்றும் பொதுமக்கள் பங்கேற்புடன் டாக்சி சேவை செயலி உருவாக்கப்பட வேண்டும் என மக்கள் நீதி மய்யம் வலியுறுத்தியுள்ளது.
சென்னை,
அரசு டாக்சி சேவை தொடர்பாக மக்கள் நீதி மய்யம் கூறியிருப்பதாவது: பிரபல தனியார் டாக்சி சேவை நிறுவனங்களுக்கு மாற்றாக, கேரள மாநில அரசு 'கேரளா சவாரி' என்ற புதிய செயலியை அறிமுகப்படுத்தியுள்ளது பாராட்டத்தக்கது. அதிக கட்டணம் வசூலிக்கும் டாக்சி சேவை நிறுவனங்களிடமிருந்து இது மக்களைப் பாதுகாக்கும் என்பதால், அனைத்து தரப்பினரிடமும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
தமிழகத்திலும் அரசு உதவியுடன், தனியார் பொதுமக்கள் (PPP) பங்கேற்புடன் செயலி உருவாக்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட வேண்டும். பொதுமக்கள் நியாயமான கட்டணத்தில் பயணிப்பதையும், வாடகை வாகன ஓட்டிகளுக்கு நியாயமான லாபம் கிடைப்பதையும் தமிழக அரசு உறுதி செய்யவேண்டும். இவ்வாறு மக்கள் நீதி மய்யம் தெரிவித்துள்ளது.
Related Tags :
Next Story