திருவள்ளூர் அருகே தேசிய ஊரக வேலை திட்டத்தில் பணி வழங்காததை கண்டித்து பொதுமக்கள் மறியல்


திருவள்ளூர் அருகே தேசிய ஊரக வேலை திட்டத்தில் பணி வழங்காததை கண்டித்து பொதுமக்கள் மறியல்
x

திருவள்ளூர் அருகே தேசிய ஊரக வேலை திட்டத்தில் பணி வழங்காததை கண்டித்து பொதுமக்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

திருவள்ளூர்

திருவள்ளூரை அடுத்த பூண்டி ஒன்றியம் புதிய திருப்பாச்சூர் பகுதியில் தேசிய ஊரகபணியாளர்களுக்கு கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக முறையாக வேலை வழங்காமல் இருந்து வந்தனர். இதன் காரணமாக அந்த பகுதியை சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட பெண்கள் வேலை இல்லாமல் அவதிப்பட்டு வந்தனர். இது குறித்து அவர்கள் ஊராட்சி மன்ற தலைவரிடம் புகார் அளித்தும் அவர்களுக்கு வேலை வழங்க எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை . இதனால் ஆத்திரமடைந்த திரளான பெண்கள் நேற்று திருவள்ளூர் கடம்பத்தூர் சாலையில் திடீர் சாலை மறியலில்ஈடுபட்டனர்.

போக்குவரத்து பாதிப்பு இதன் காரணமாக அந்த வழித்தடத்தில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதுபற்றி தகவலறிந்த திருவள்ளூர் துணை போலீஸ் சூப்பிரண்டு சந்திரதாசன், சப்-இன்ஸ்பெக்டர் சக்திவேல், திருவள்ளூர் தாலுகா போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

மேலும் அந்த பகுதி மக்களுக்கு தேசிய ஊரக வேலை திட்டத்தின் கீழ் வேலை வழங்க உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து அனைவரும் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். மறியல் காரணமாக அந்த வழித்தடத்தில் அரை மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.


Next Story