திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்


திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்
x

திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கத்தில் நடைபெற்ற பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை கலெக்டர் வழங்கினார்.

திருவள்ளூர்

திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கத்தில் நேற்று நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வருகை புரிந்த பொதுமக்கள் நிலம் சம்பந்தமாக 91 மனுக்களும், சமூக பாதுகாப்பு திட்டம் தொடர்பாக 66 மனுக்களும், வேலை வாய்ப்பு தொடர்பாக 25 மனுக்களும், பசுமை வீடு மற்றும் அடிப்படை வசதிகள் தொடர்பாக 99 மனுக்களும், இதர துறைகள் சம்பந்தமாக 106 மனுக்களும் என மொத்தம் 387 மனுக்களை திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் டாக்டர். ஆல்பி ஜான் வர்கீஸ் பெற்றுக்கொண்டு அம்மனுக்களின் மீது உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். அதைதொடர்ந்த மாற்றுத்திறனாளிகளுக்கு நடைபெற்ற சிறப்பு குறை திர்க்கும் கூட்டத்தில் ஊத்துக்கோட்டை வட்டத்தை சேர்ந்த 16 ஊனமுற்ற குடும்பங்கள் வாடகை வீட்டில் வாழ்ந்து கொண்டு வாடகை கூட தர முடியாமல் தவித்து வருகின்றனர். அவர்களுக்கு இலவச வீட்டு மனை வழங்க வழிவகை செய்திட மனு அளிக்கப்பட்டது.

கூட்டத்தில் பார்வையற்ற ஒரு மாற்றுத்திறனாளி மாணவி முதலாம் ஆண்டு சட்டப் படிப்பு பயில்வதற்காக கையடக்க கணினி பெறும் பொருட்டு அந்த மாணவிக்கு திருவள்ளூர் மாவட்ட கலெக்டரின் விருப்புரிமை நிதியிலிருந்து கல்வி உதவித் தொகையாக ரூ.20 ஆயிரத்திற்கான காசோலையையும், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பாக குழந்தை திருமணத்திலிருந்து மீட்டெடுக்கப்பட்ட 2 பெண் குழந்தைகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்காக தையல் எந்திரங்கள் மற்றும் உயர்கல்வி பயின்று வரும் ஒரு மாணவிக்கு கல்லூரி கட்டணமாக ரூ.28 ஆயிரத்திற்கான காசோலையையும், அனைத்து திருமண நிதி உதவி திட்டத்தின் கீழ் 10 பயனாளிகளுக்கு தலா 8 கிராம் தங்க நாணயங்களையும் கலெக்டர் வழங்கினார். அதைத் தொடர்ந்து கால்கள் பாதிக்கப்பட்ட ஒரு மாற்றுத் திறனாளிக்கு ரூ.8 ஆயிரத்து 850 மதிப்பீட்டிலான மடக்கு சக்கர நாற்காலியை கலெக்டர் இலவசமாக வழங்கினார். இந்த மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் அசோகன் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் குணசேகர் மாவட்ட சமூக நல அலுவலர் சுமதி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


Next Story