வேதாரண்யத்தில் பொதுமக்கள் சாலைமறியல்


வேதாரண்யத்தில் பொதுமக்கள் சாலைமறியல்
x

வேதாரண்யத்தில் பொதுமக்கள் சாலைமறியல்

நாகப்பட்டினம்

வேதாரண்யம் தாலுகா கோடியக்கரை- கோடியக்காடு ஊராட்சிகள் அமைந்துள்ளன. தற்போது மீன்பிடி சீசன் காலம் என்பதால் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த மீனவர்கள் இங்கு தங்கி மீன்பிடித்து வருகின்றனர். கோடியக்காடு எல்லையில் கழுங்கு பாலம் 1942-ம் ஆண்டு கட்டப்பட்டது. தற்போது இந்த பாலம் இடிக்கப்பட்டு புதிதாக பாலம் கட்டும் பணி நடந்து வருகிறது. இந்த பாலப்பணிக்கு மாற்றுப்பாதையாக நடைபாதை அமைக்கப்பட்டுள்ளது. இந்த பாதையில் இருசக்கர வாகனம் மட்டுமே செல்ல முடிகிறது. இந்த வழியை பயன்படுத்தும் பொதுமக்கள், சுற்றுலாப்பயணிகள், மீன் வியாபாரிகள், பள்ளி மாணவ- மாணவிகள் சுமார் 2 கிலோ மீட்டர் சுற்றி கோடியக்கரைக்கு செல்ல வேண்டி உள்ளது. அரசு போக்குவரத்து கழக பஸ்கள் பாலப்பணிகள் நடைபெறும் இடத்திற்கு முன்பே பொதுமக்களை இறக்கிவிட்டு செல்லுகின்றனர். ஒரு சில பஸ்கள் மட்டுமே கோடியக்கரை இறுதிவரை செல்கிறது. இதனால் பல நேரங்களில் பொதுமக்கள் நடந்து செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. எனவே கோடியக்காடு- கோடியக்கரையில் இருக்கும் ஒரே பிரதான சாலையில் பாலப்பணி நடைபெறுவதால் மாற்று பாதையை அகலப்படுத்தி தரவேண்டும் என பொதுமக்கள் பஸ்ைச வழிமறித்து சாலைமறியலில் ஈடுபட்டனர். தகவல் அறிந்ததும் அங்கு வந்த அதிகாரிகள் பஸ்கள் மாற்றுபாதையில் இயக்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்ததின் பேரில் சாலைமறியல் கைவிடப்பட்டது.


Next Story